திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

பெண் இயக்குனரை படுக்கைக்கு அழைத்த காமெடி நடிகர்.. கம்ப்ளைன்ட் செய்ததால் வீட்டுக்கு அனுப்பிய தயாரிப்பாளர்

வேலைக்கு செல்லும் ஒரு பெண் வீடு திரும்புவதற்குள் ஏகப்பட்ட சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதிலும் திரை துறையில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது இன்றைய சூழலில் கிடையாது. தற்போது எங்கு திரும்பினாலும் அட்ஜஸ்ட்மென்ட் புகார்கள் தான் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

பெரிய மனிதர் என்ற போர்வையில் சிலர் செய்யும் அக்கிரமங்கள் அதிகம். அப்படித்தான் பிரபல காமெடி நடிகர் ஒருவர் பெண் இயக்குனரிடம் நடந்து கொண்ட முறை தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. வித்தியாசமான குரலில் பேசும் இவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.

Also read : செட் லைட் விழணும்னா பெட்ரூம் லைட் அணையனும்.. நடிகையிடம் தெனாவட்டாக பேசிய இயக்குனர்

அந்த வகையில் பெரிய நிறுவனம் தயாரித்த ஒரு படத்தில் இந்த காமெடி நடிகரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் படப்பிடிப்பு தளத்தில் உதவி இயக்குனர்களாக பலரும் பணிபுரிந்தனர். அதில் அந்த பெண் உதவி இயக்குனரும் ஒருவர்.

அவரிடம் அந்த காமெடி நடிகர் டபுள் மீனிங் வசனங்களையும், அசிங்கமாக பேசுவது, தொட்டு உரசுவது என்று இருந்திருக்கிறார். அப்பா வயதில் இருக்கும் அந்த நடிகர் இப்படி நடந்து கொள்வது அந்த பெண்ணை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

Also read : வயதானவரை மயக்கி பிடியில் வைத்திருக்கும் நடிகை.. 2ம் திருமணத்தில் நடந்த ட்விஸ்ட்

அதனால் அந்த உதவி இயக்குனர் நடிகரின் கண்ணில் படாதவாறு வேலை செய்திருக்கிறார். இருப்பினும் அந்த நடிகர் அவரிடம் இதே போன்று மோசமாக பேசியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் இன்று இரவு என்னுடைய வீட்டிற்கு வா என்று சிரித்துக் கொண்டே கூறியிருக்கிறார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடம் சென்று முறையிட்டிருக்கிறார். தனக்கு நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த அவருக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. ஏனென்றால் அந்த தயாரிப்பாளர் அவரிடம் இனி நீ சூட்டிங் ஸ்பாட்டிற்கு வரவேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உடனடியாக படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளியேறி இருக்கிறார். இந்த சம்பவம் ஒரு உதாரணம்தான். இது போல் இன்னும் எத்தனையோ சங்கடங்கள் பெண்களுக்கு திரைத்துறையில் இருக்கிறது. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பலரும் அந்த காமெடி நடிகர் இப்படிப்பட்ட ஆளா என்று வாயடைத்து போய் இருக்கின்றனர்.

Also read : விலைமாதுவாக நடிக்க ஆசைப்படும் கொழுக் மொழுக் நடிகை.. திறமையை நிரூபிக்க இப்படி ஒரு ஆசையா!

Trending News