கோலிவுட்டில் 20 வருடங்களுக்கு மேலாக காமெடி நடிகராக நடித்து வருபவர் தான் நடிகர் சாம்ஸ். இவரது ஜாவா சுந்தரேசன் கேரக்டர் தமிழ் மக்களின் மனதில் இன்றுவரை நீங்காத இடம் பிடித்து இருக்கிறது. மேலும் சாம்ஸ்க்கு யோஹன் என்ற மகன் இருக்கிறார்.
இந்த நிலையில் யோஹனும் சினிமாவில் நடிக்க தயாராகி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் யோஹன் முறைப்படி கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சியும், தனியார் திரைப்பட கல்லூரியில் இயக்குனர் பயிற்சியும் முடித்துள்ளாராம்.
அதுமட்டுமில்லாமல், யோஹன் தற்போது இயக்குநர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருவதாகவும் சொல்லப்படுகிறது. இவ்வாறிருக்க, நடிகர் சாம்ஸ் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் யோஹனின் சினிமா என்ட்ரி பற்றி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் சாம்ஸ், தன்னுடைய மகன் தற்போது நடிகராக களம் இறங்க தயாராகிவிட்டதாகவும், ரசிகர்கள் தனக்கு அளித்த ஆதரவை தனது மகனுக்கும் அளிக்க வேண்டுமென்றும் தெரிவித்திருக்கிறாராம்.
அதேபோல் சாம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், தன்னுடைய மகனுடைய புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார்.
மேலும் இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலர், ‘உங்களுக்கு இவ்வளவு பெரிய மகனா?’ என்று கேள்வி எழுப்பி வருவதோடு, சாம்ஸின் மகன் திரையுலகில் வெற்றி பெற தங்களது வாழ்த்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.