Ravi Mohan: இது என்னடா ஜெயம் ரவிக்கு வந்த சோதனை என்ற நிலைமை தான் உள்ளது. சமீபாலமாக இவர் எடுக்கும் முடிவுகள் எல்லாமே விசித்திரமாகவும், வித்தியாசமாகவும் இருக்கிறது. ரவி மோகன் நடிக்கும் படங்கள் சரியாக போகவில்லை.
தொடர்ந்து ப்ளாப் கொடுத்து வந்தாலும் கைவசம் நிறைய படங்களை வைத்திருக்கிறார். இப்போதும் தயாரிப்பாளர்கள் அவரது வீட்டு வாசலில் காத்திருக்கின்றனர். ஆனால் ரவி மோகன் வேற ஒரு முடிவை எடுத்திருக்கிறார்.
அவரது அண்ணன் ராஜா மோகனைப் போல் டைரக்ஷனில் இறங்கியுள்ளார். முதல் முதலாக இயக்குனராக அறிமுகமாகும் ரவி காமெடி நடிகரை ஹீரோவாக வைத்து இயக்க உள்ளார்.
ரவி மோகன் டைரக்ஷனில் நடிக்கும் காமெடி நடிகர்
இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் காமெடி நடிகர் யோகி பாபு தான் அந்த படத்திற்கு கதாநாயகனாம். ஏற்கனவே மண்டேலா போன்ற சில படங்களில் யோகி பாபு கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
ரவி மோகனுடன் யோகி பாபு கோமாளி படத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் இருவருக்கும் நல்ல நட்பு இருந்து வருகிறது. மேலும் ரவி மோகன் இயக்கும் படம் முழுக்க முழுக்க காமெடி ஜானரில் எடுக்கப்பட உள்ளதாம்.
யோகி பாபு மற்றும் ரவி மோகன் இருவரும் படங்களில் பிஸியாக இருப்பதால் அந்த படங்களை முடித்தவுடன் விரைவில் இதற்கான படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.