செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வடிவேலு, விவேக் படங்களில் நடித்த காமெடி நடிகர்.. திடீர் மறைவால் அதிர்ச்சியில் உறைந்த கோலிவுட்

வடிவேலு மற்றும் விவேக் போன்ற காமெடி நடிகர்களின் படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த பிரபலம் ஒருவர் திடீர் உடல்நலக்குறைவால் காலமானார். இயக்குனர் மற்றும் நடிகரான விசுவின் படத்தின் மூலம் இவர் சினிமாவில் அறிமுகமானார். கிட்டதட்ட 200க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

பட்டுக்கோட்டை இவரது சொந்த ஊர் என்பதால் தனது பெயரிலேயே ஊரையும் சேர்த்துக் கொண்டார். அதாவது விசுவின் பூந்தோட்டம் படத்தின் மூலம் அறிமுகமான பட்டுக்கோட்டை சிவ நாராயணமூர்த்தி பல படங்களில் நடித்து தனது முத்திரையை பதித்துள்ளார்.

Also Read : மீண்டும் பார்க்கத் தூண்டும் சுந்தர் சி-யின் 5 சிறந்த படங்கள்.. வயிறு குலுங்க சிரிக்க வைத்த பிரசாந்த் வடிவேலு காம்போ

இவருக்கு வயது 67 ஆகும். பார்ப்பதற்கு உடல் பருமனாக இருப்பதால் பெரும்பாலும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி ஊர் பஞ்சாயத்து தலைவராகவோவும் சில படங்களில் நடித்துள்ளார். இது தவிர ஒரு சில சின்னத்திரை தொடர்களிலும் சிவ நாராயணமூர்த்தி நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் தனது சொந்த ஊருக்குச் சென்று குடும்பத்துடன் இருப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் பட்டுக்கோட்டைக்கு சென்று இருக்கும்போது திடீரென உடல்நல குறைவு ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

Also Read : படு மொக்கை போடும் வடிவேலு.. பழைய படங்களை பட்டி டிங்கரிங் பார்த்து வெளியான நாய் சேகர் ரிட்டன்ஸ் ட்ரெய்லர்

இவருக்கு புஷ்பவள்ளி என்ற மனைவியும், லோகேஷ், ராம்குமார் என்ற இரண்டு மகன்கள் மற்றும் ஸ்ரீதேவி என்ற மகளும் உள்ளார். இந்நிலையில் இவரின் சொந்த ஊரான பட்டுக்கோட்டையிலேயே இன்று இவரது இறுதிச் சடங்கு நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த தகவலை அறிந்த திரைத்துறையினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் வெண்ணிலா கபடி குழு படத்தில் காமெடி நடிகர் ஹரி பைரவன் திடீரென உயிரிழந்தார். அதற்குள்ளாகவே அடுத்த காமெடி நடிகரின் மரணம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read : விவேக்கை அவமானப்படுத்திய 2 ஹீரோக்கள்.. நான் இருக்கிறேன் என்று துணையாய் நின்ற குழந்தைகுணம் நடிகர்

Trending News