வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஒரே ஆண்டில் 55 படங்களில் நடித்து சாதனை படைத்த காமெடி நடிகர்.. எம்ஜிஆர், சிவாஜிக்கு பயத்தை காட்டிய அழியா புகழ்!

MGR-Sivaji: எம்ஜிஆர், சிவாஜியை போல் சினிமாவில் தனக்கான அங்கீகாரத்தை பெற வேண்டி, சாதிக்கும் வெறியோடு தன் திறமையை வெளிக்காட்டி 42 வயதில் மரணம் சம்பவித்த காமெடி நடிகர் பற்றிய தகவலை இத்தொகுப்பில் காணலாம்.

எளிமையான குடும்பத்தைச் சேர்ந்து தாய், தந்தையினரை இழந்து அண்ணன் தயவில் வாழ்ந்து மெக்கானிக் கடையில் வேலை பார்த்தவர் சுருளிராஜன். அவ்வப்போது நாடகம் பார்க்கும் பழக்கம் கொண்ட இவர் நடிக்கும் ஆசை கொண்டு காகித பூ என்ற நாடகத்தில் நடிப்பை தொடங்கினார்.

Also Read: இமேஜை காப்பாற்ற அஜித் விளையாடிய பூங்காவை இழுத்து மூடிய பிரபலம்.. தெரியாதுன்னு சொன்னதற்கு இப்படி ஒரு காரணமா?

இவரின் நடிப்பு திறமையை கண்டு வியந்த நடிகர் ஜெய்சங்கர் தமிழ் சினிமாவில் இவரை அறிமுகம் செய்தார். அவ்வாறு இவர் ஏற்று முதல் படம் தான் இரவும் பகலும். அதன்பின் நண்பர்களாய் பழகி வந்த இவர்கள் அடுத்தடுத்த படங்களில் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பினை பெற்றார்கள்.

அதை தொடர்ந்து எந்த பட்ஜெட் படங்களாக இருந்தாலும் சரி அப்படத்தின் காமெடி நடிகர் என்றால் அக்கால கட்டத்தில் இவர் மட்டும்தான். தன்னிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வை கொண்டு இவர் நடித்த படங்கள் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற தொடங்கியது.

Also Read: ரஜினி ஜெயிலர் படத்தால் பழையபடி வரும் ஹீரோ வாய்ப்பு.. ஜெட் வேகத்தில் சும்மா ஸ்விங்ன்னு ஏரிய சம்பளம்

அவ்வாறு சிவாஜி, எம்ஜிஆர் காலத்தில் அவர்களின் நடிப்பிற்கு நிகராய் நடிப்பில் பட்டையை கிளப்பி வந்த மகா கலைஞன் தான் சுருளிராஜன். காமெடி நடிகராகவும், குணசித்திர நடிகராகவும் தன் நடிப்பினை வெளிக்காட்டி வந்தார். அதைத்தொடர்ந்து மாந்தோப்பு கிளியே என்னும் பாடத்தில் நடித்தார்.

இப்படத்தில் ஹீரோ, ஹீரோயின் கதாபாத்திரத்தை தாண்டி இவரின் கஞ்சத்தனமான கதாபாத்திரமே பெரிதாய் பார்க்கப்பட்டது. இவரின் நடிப்பை கொண்டுதான் அப்படம் ஓடியது என்றே கூறலாம். அதை தொடர்ந்து ஹிட்லர் உமர்நாத் படத்தில் சிவாஜி உடன் இணைந்து நடித்த சுருளிராஜனின் வில்லுப்பாட்டு மிகப்பெரிய அளவில் பிரபலமானது.

Also Read: அப்பத்தாவிடம் ருத்ர தாண்டவம் ஆடும் குணசேகரன்.. ஜீவானந்தம் குடும்பத்தைக் காப்பாற்றும் ஜனனி

மேலும் ரஜினியின் ஜானி படத்திலும் இவரின் நகைச்சுவை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கும். அவ்வாறு 1980 ஆம் ஆண்டு அந்த ஒரே வருடத்தில் சுமார் 55 படங்களில் நடித்ததாக கூறப்படுகிறது. இது போன்ற சாதனையை படைத்து சிவாஜி, எம்ஜிஆருக்கு டஃப் கொடுத்திருக்கிறார் என்றால் அது மிகை ஆகாது. அவ்வாறு நகைச்சுவையில் தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட இவர் தன் 42 வது வயதில் இயற்கை எய்தினார் என்பது தமிழ் சினிமாவிற்கு மாபெரும் இழப்பை ஏற்படுத்தியது.

Trending News