தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் கஷ்டப்பட்டு தான் சினிமாவில் முன்னேறி உள்ளனர் அப்படி நகைச்சுவையாக பேசி மக்களை சிரிக்க வைத்த நடிகர்கள் அவர்களது வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை பற்றி பார்ப்போம்.
சந்திரபாபு
சந்திரபாபு தனக்கென ஒரு ஸ்டைல், கடின உழைப்பு மற்றும் திறமை மூலம் சினிமாவில் புகழின் உச்சத்திற்கு சென்றார். ஆனால் மது பழக்கத்தால் சினிமா வாய்ப்புகளை இழந்தார் எம்ஜிஆரின் அனைத்து படங்களிலும் நடித்தவர். ஆனால் இவரது வாழ்க்கையில் கடைசியாக ஒரு மதுபாட்டில் வாங்குவதற்கு கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த அளவிற்கு வாழ்க்கையில் கஷ்டப்பட்டு உள்ளார்.
தங்கவேலு
தங்கவேலு இல்லாமல் சிவாஜி நடிக்க மாட்டார் என்று கூறுமளவிற்கு இவருடைய நட்பு அன்றைய காலத்தில் இருந்துள்ளது. அவருக்கு இரண்டு மனைவிகள் இருந்தும் புத்திர பாக்கியம் இல்லை அதனாலே அவர் சோகத்துடன் வாழ்க்கையை கழித்தார்.
கலைவாணர் என் எஸ் கே
கலைவாணர் என் எஸ் கே சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டார். சக்கரவர்த்தி திருமகள் படத்தில் எம்ஜிஆரிடம் நடிப்பதற்காக கெஞ்சி அந்த பட வாய்ப்பை பெற்றார். அப்படி சினிமாவில் பல கஷ்டங்கள் பட்டுள்ளார் கலைவாணர் என் எஸ் கே.
நாகேஷ்
1970ஆம் ஆண்டு முதல் 1980ஆம் ஆண்டு வரை அன்றைய காலத்தில் இருந்த கதாநாயகர்களுக்கு இணையான சம்பளம் வாங்கிய ஒரே காமெடி நடிகர் நாகேஷ். நாகேஷுக்கு அனைத்து படங்களிலும் எம்ஜிஆர் வாய்ப்பு கொடுத்தார். ஆனால் எம்ஜிஆரை பற்றி தவறாகப் பேசியதால் அதன்பிறகு நிறைய பட வாய்ப்புகளை இழந்தார். பின்பு சினிமாவில் வாழ்க்கையிலும் மிகவும் கஷ்டப்பட்டார்.
கவுண்டமணி
கவுண்டமணி அன்றைய காலத்தில் காமெடியின் உச்சத்தில் இருந்த ஒரு நடிகர் அப்போது இவர் படங்களில் நடிப்பதற்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்தன. அதன்பிறகு கதாநாயகனாக ஒரு சில படங்களில் நடித்தார். அப்போது பல இயக்குனர்களும் அவர் கதாநாயக மாறிவிட்டார் என கூறி பட வாய்ப்புகளை கொடுக்க மறுத்தனர். ஆனால் அதன் பிறகும் இவருக்கு சரிவர பட வாய்ப்புகள் அமையாமல் கஷ்டப்பட்டார்.