ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

சூரிக்கு போட்டியா களமிறங்கும் காமெடி நடிகர்.. ஆக்சன் ஹீரோவாக எடுக்கும் புது அவதாரம்

சந்தானத்திற்கு போட்டியாக பல படங்களில் ஹீரோ அவதாரம் எடுத்து விட்டார் சூரி, காமெடி ஹீரோக்கள் எல்லோரும் இப்பொழுது சோலோ ஹீரோவாக மாறிவிட்டார்கள்.ஆனால் தனது பழைய டிராக்டை மாற்றாமல் இன்னும் காமெடி கலந்த கதையிலேயே ஹீரோ அவதாரம் எடுத்து வருகிறார் சந்தானம்.

சூரி காமெடி மட்டுமல்லாது சீரியஸான குணச்சித்திர ஹீரோவாக மாறிவிட்டார். விடுதலை, கருடன், கொட்டுக்காளி என சீரியஸான படங்களில் நடித்து வசூலை வாரி குவித்து வருகிறார். ஆனால் சந்தானம் பழைய ட்ராக்கை மாற்றுவதாக தெரியவில்லை. நிறைய தோல்வி படங்களை கொடுத்து திணறி வருகிறார்.

சூரி ஹீரோவாக நடித்த அத்தனை படங்களும் சூப்பர் ஹிட். ஆனால் தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கிறார் சந்தானம். இப்பொழுது இவர்கள் இரண்டு பேருக்கும் போட்டியாக காமெடி நடிகர் ஒருவர் புது அவதாரம் எடுத்து வருகிறார். ஏற்கனவே ஹீரோவாக ஒன்று- இரண்டு படங்களில் நடித்திருந்தாலும். இப்பொழுது ஆக்சன் ஹீரோவாக களம் இறங்குகிறார்.

ஆக்சன் ஹீரோவாக எடுக்கும் புது அவதாரம்

நாய் சேகர், கான்ஜுரிங் கண்ணப்பன் போன்ற காமெடி கலந்த கதாபாத்திரத்தில் சதீஷ் ஹீரோவாக நடித்தாலும், இவர் இன்னும் ஒரு சீரியஸானஆக்சன் ஹீரோ அந்தஸ்துக்கு வரவில்லை. இப்பொழுது சதீஷ் “சட்டம் என் கையில்” என்னும் ஆக்சன் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் செப்டம்பர் 20ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. சிக்ஸர் படத்தை இயக்கிய இயக்குனர் சச்சி இந்த படத்தை இயக்கியுள்ளார். வித்யா பிரதீப் அவருடன் ஜோடியாக நடித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Trending News