வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

இந்த வருடம் திருமணம் செய்து கொள்ள போகும் 5 நட்சத்திரங்கள்.. முடிவுக்கு வந்த பிரேம்ஜியின் முரட்டு சிங்கிள் வேஷம்

Actors-Marriage update: திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயம் செய்வது என்று சொல்வார்கள். ஒரு வயதிற்கு மேலே அனைவராலும் கேட்கக்கூடிய ஒரே கேள்வி எப்போது திருமணம் என்பதே. அதேபோன்றுதான் நடிகர்களுக்கும், சொல்லவே வேணாம் ரசிகர்களிடையே பயங்கரமான எதிர்பார்ப்பு இருக்கும் யாரை திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதில். அப்படி விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கும் ஜோடிகள் யார் என பார்க்கலாம்.

தமன்னா: தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து புகழ்பெற்ற நடிகை தான் தமன்னா. இவர் ஹிந்தியில் “லஸ்ட் ஸ்டோரி 2” எனும் வெப் சீரிஸில் நடித்தார். அப்போது விஜய் வர்மா உடன் நெருக்கமாக பழக்கும் ஏற்பட்டு, அதுவே இருவருக்கும் காதலாக மாறியது. இருவரின் குடும்பத்திலும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டனர். கூடிய விரைவில் இவர்களது திருமணம் நடக்கவிருக்கிறது.

Also Read:ராகவா லாரன்ஸ், SJ சூர்யா மிரட்டும் ஜிகர்தண்டா-2.. ரிலீஸ் தேதியோடு ட்ரெண்டாகும் டீசர்

அசோக் செல்வன்: நடிகர் அசோக் செல்வன் மற்றும் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனும் ரொம்ப நாளாக காதலித்து வந்தனர். சமீபத்தில் தான் அவர்களுக்கு நிச்சயதார்த்தமும் குடும்பத்தினர் விருப்பத்தோடு நடந்தது. அதனை தொடர்ந்து வரும் செப்டம்பர் 13ஆம் தேதி சென்னையில் இவர்களின் திருமணம் நடக்க இருக்கிறது. திருமண பத்திரிக்கை சோசியல் மீடியாக்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. இவர்கள் இருவரும் தமிழில் “ப்ளூ ஸ்டார்” எனும் திரைப்படத்தில் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஐஸ்வர்யா அர்ஜுன்: தமிழ் திரை உலகின் “ஆக்ஷன் கிங்” அர்ஜுனின் மகளான ஐஸ்வர்யாவும், நகைச்சுவை நடிகரான தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் நீண்ட நாளாக காதலித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இரு வீட்டாரும் கலந்து பேசி இவர்களுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர். இவர்களின் திருமணம் 2024 பிப்ரவரி மாதம் இருக்கலாம் என்று தகவல் வெளியானது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக தேதி இவர்கள் வெளியே அறிவிக்கவில்லை.

Also Read:தனித்துவமாக மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த 5 படங்கள்.. இளம் ஹீரோக்களுக்கு கொடுத்த அந்த மூன்று ஹிட்

பிரேம்ஜி: கங்கை அமரனின் இளைய மகன்தான் பிரேம்ஜி. தற்போது இவருக்கு 43 வயது ஆகிறது. ரசிகர்கள் எப்போதும் இவரை கேட்கும் ஒரே கேள்வி, திருமணம் எப்போது என்பதே. இவரும் பாடகி வினைத்தாவும் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் ரூமர்கள் பரவின. இருவரும் நெருக்கமாக இருப்பது போல் வினைத்தா இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஸ்டோரியில் போட்டதும் வைரல் ஆனது. அதில் என் புருஷன் எனக்கு மட்டும்தான் என பாடலையும் போட்டு இருந்தார். பிரேம்ஜியும் அதை ஸ்டோரியாக போட்டிருந்தார். விரைவில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

சித்தார்த்: தமிழ் திரை உலகின் பிளேபாய் என அழைக்க கூடிய அளவிற்கு சச்சைகைளில் சிக்கியவர்தான் சித்தார்த். “மகா சம்பூரம்” என்னும் இந்தி திரைப்படத்தில் நடித்தனர். அப்போதிலிருந்து நடிகை அதிதி ராவை இவர் காதலித்து வருகிறார் என வதந்தி பரவியது. அதனைத் தொடர்ந்து இருவரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ஆடியோ லான்ச் போதும், ஏ ஆர் ரகுமான் மகளின் ரிசப்ஷனுக்கும் ஒன்றாக வந்தனர். மீடியாக்களில் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என தகவல்கள் பரவியது. என்ன நடக்கிறது என பொறுத்து இருந்து பார்ப்போம்.

Trending News