வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கோடிகளை கொட்டும் நிறுவனங்கள்.. பா ரஞ்சித்தை நம்பி படையெடுக்கும் தயாரிப்பாளர்கள்

Pa Ranjith: சமூகம் சார்ந்த படங்களை எடுக்கும் இயக்குனர்கள் தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் சொர்ப்பம் தான். அவர்களை விரல் விட்டு என்னும் அளவுக்கு தான் இருக்கிறார்கள். அந்த வகையில் பா ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்கள் சமூக அக்கறை கொண்ட படங்களை எடுத்து வருகிறார்கள்.

இதில் பா ரஞ்சித் இயக்குனராக ஒரு புறம் பிசியாக இருந்தாலும் தயாரிப்பாளராகவும் பட்டையை கிளப்பி வருகிறார். தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தை பா ரஞ்சித் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடந்து வரும் நிலையில் இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தங்கலான் படம் திரையில் வர இருக்கிறது.

Also Read : விக்ரம் போல கட்டுமஸ்தானாக மாறிய துருவ் விக்ரம்.. மாரி செல்வராஜ் வெளியிட்ட புகைப்படம்

இந்நிலையில் தன்னுடன் உதவி இயக்குனராக பணியாற்றிய இயக்குனர்களை தனது நீளம் ப்ரொடக்ஷன் மூலம் இயக்குனராக அறிமுகம் செய்து வருகிறார் பா ரஞ்சித். இவர் மீது நம்பிக்கை வைத்து சிங்கப்பூர் நிறுவனங்கள் முதலீடு செய்து வருகிறார்கள். அந்த பணத்தை வைத்து தான் இப்போது பா ரஞ்சித் படங்களை தயாரித்து வருகிறார்.

அதுவும் நல்ல கதைகளை மட்டும் தான் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இந்த சூழலில் சமீபத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் போர் தொழில். சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் சீரியல் கில்லராக வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்தது.

Also Read : தங்கலானுக்கே டஃப் கொடுத்த அட்டகத்தி தினேஷ் கெட்டப்.. பா ரஞ்சித் மிரட்டி விடப் போகும் வித்தியாசமான புகைப்படம்

இப்படம் மினிமம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் வசூலை வாரி குவித்தது. இப்போது பா ரஞ்சித் தயாரிப்பு நிறுவனத்தில் போர் தொழில் தயாரிப்பாளர் முதலீடு செய்ய இருக்கிறாராம். ஆகையால் இன்னும் நல்ல படங்களை அதிகமாக தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து பா ரஞ்சித் கொடுக்க இருக்கிறார்.

கண்டிப்பாக இந்த படங்கள் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. அடுத்தடுத்து பா ரஞ்சித் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படங்கள் வெளியாக இருக்கிறது. போர் தொழில் படத்தை தொடர்ந்து நிறைய தயாரிப்பாளர்கள் பா ரஞ்சித்தை நோக்கி படையெடுக்கிறார்கள்.

Also Read : முதல் படத்திலேயே முத்திரை பதித்த 5 இயக்குனர்கள்.. ஆடியன்ஸ்களை மிரள வைத்த போர் தொழில்

Trending News