சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. வசமாக சிக்கிக் கொண்ட ஷங்கரின் மருமகன்

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் சங்கர். முன்னணி நடிகர்கள் பலரையும் வைத்து அவர் படம் இயக்கியுள்ளார். இவருக்கு ஒரு மகனும் 2 மகள்களும் உள்ளனர்.

இதில் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கு கடந்த ஜூன் மாதம் கிரிக்கெட் வீரர் ரோஹித் உடன் திருமணம் நடந்தது. தற்போது ரோகித் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரோஹித் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார். புதுச்சேரியில் கிரிக்கெட் பயிற்சியாளரான தாமரைக்கண்ணன் அங்கு பயிற்சிக்கு வந்த பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது குறித்து அந்த மாணவி கிரிக்கெட் கிளப்பில் புகார் அளித்துள்ளார். ஆனால் அதிகாரிகள் அந்த புகாரை பெறாமல் மாணவியை திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் அந்த மாணவி போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

அவருடைய புகாரின் பேரில் தாமரைக்கண்ணன், கிளப்பின் உரிமையாளர் தாமோதரன், அவருடைய மகன் ரோஹித் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட அவர்களை போலீசார் தற்போது தேடி வருகின்றனர். முன்னணி தமிழ் முன்னணி இயக்குனரான ஷங்கரின் மருமகன் ரோஹித் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது  திரையுலகில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

shankar-rohit
shankar-rohit

Trending News