டிக் டாக் என்கிற செயலி வந்த பிறகு நடித்த நடிப்பால் வளர்நத நடிக்க கற்ற பலரும் பிரபலமாகினர்.அந்த வரிசையில் தமிழகத்தின் டாப் ஸ்டார்களாக வலம் வந்தவர்கள் ரவுடி பேபி சூர்யா மற்றும் திருச்சி சாதனா.
அப்போதய நேரத்தில் தமிழகத்தில் டிக்டோக் பயனாளர்களில் 10ல் 8-பேருக்கு பரிட்சயமானவர்கள் இவர்கள். இன்னும் பலர் அவ்வப்போது வந்ததும் போவதும என இருக்கத்தான் செய்தார்கள்.
திண்ணையில் கிடந்தவன் திடீரென திருமணம் செய்தாற் போல் ஒரே நாள் ரிப்ளே வீடியோவில் ஜி.பி.முத்துவை டிரண்டாக்கினார் ரவுடி பேபி. செத்த பயலே, நார பயலே என வித்யாசமான வார்த்தைகளை பயன்படுத்தி இவர் பதிவிடும் வீடியோ பதிவுகளுக்கு ரசிகர்கள் ஏராளம்.
ஒவ்வொரு முறையும் பரிசுப்பொருட்களை பிரிக்கும் பட்சத்தில் பஞ்சாயத்து இல்லாமல் பத்து நிமிடம் கடப்பது அரிது. இப்படியாக பிரபலமான இவர்களுக்கும் பல்வேறு விமர்சனங்கள் வந்துகொண்டே இருந்தன. ரவுடி பேபி, திருச்சி சாதனா, அமுதா உட்பட பலரும் கமாண்டுகளில் கழுவி ஊற்றப்பட்டனர்.
அவ்வப்போது இவர்களும் தகாத வார்த்தைகளால் டிக்டோக்கை தினரடித்தனர் யாரோ ஒருவருக்கு ஃபாலோவராக ஒரு பிரபலம் வந்து விட்டால் போதும் அது தான் அப்போதய கண்டென்ட் என எடத்து கண்டமேனிக்கு கழுவ துவங்குவார்கள்.
இதனை பார்த்து பாதிப்படைந்தோர் பலர் அதில் மக்கள் அதிகார இயக்கம் மேற்கொண்டு ஒரு படி தொட்டு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர்களின் சமூக வலைதள பக்கங்களை முடக்கவும் முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
அதெல்லாம் சரி டிக்டோக் இல்லாமல் போன பிறகு எதற்கு கோரிக்கை இதே தான் நானும் நினைத்தேன், ஆனால் விவா வீடியோ மூவி மேக்கர் போன்ற செயலிகளின் மூலம் இவர்களின் பிழைப்பு இப்போது நடந்து வருகிறதாம் அதை தடுக்க வேண்டுமாம்.
ஆன்லைன் கல்வி பயிலும் மாணவர்கள் இது போன்ற வீடியோக்களை பார்த்து கெட்டுப் போவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. ஏலே செத்த பயலே, நார பயலே, நீ திருந்தவே மாட்டியா இந்த தேங்காய வச்சி மண்டைய உடைச்சிருவேன்.. செத்த மூதேவி!
