புதன்கிழமை, ஜனவரி 8, 2025

ஐம்பதாயிரம் பட்டியலின மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும்.. தமிழக முதல்வரின் அசத்தலான அறிவிப்பு!

தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நேற்று நடைபெற்ற, ஆதி தமிழர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அருந்ததியர் அரசியல் மாநாட்டில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய தமிழக முதல்வர் கிராமங்களின் அருந்ததியினர் மக்கள் வாழ்கின்ற பகுதி நகரமாக மாற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

அதுமட்டுமில்லாமல் சொந்த வீடு இல்லாத 50,000 பட்டியலின மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்ற அசத்தலான அறிவிப்பையும் வெளியிட்டார்.

மேலும் பட்டியலின மக்கள் பல தொழில்கள் செய்து வாழ்வில் முன்னேற்றம் பெற அதிமுக அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. ஆதிதிராவிட நலத்துறை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 17 லட்சம் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலத்திலிருந்து அருந்ததியர் சமுதாய மக்கள் அதிமுகவிற்கு ஆதரவு அளித்து வந்துள்ளதால்,

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் தனது உரையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் பேசினார்.

Trending News