வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த மோதல், காதல் காட்சிகள்.. தரமான சம்பவங்களின் லிஸ்ட்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி தற்போது திரை உலகில் பலர் ஜொலித்து கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு சீசனிலும் டிஆர்பி ரேட்டிங்காக சர்ச்சைகளை ஏற்படுத்தக்கூடிய சில போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் வைத்திருப்பர். அதேபோல் இந்த சீசனில் யார் அந்த போட்டியாளர் என்பது இனி வரும் எபிசோடில் வெளிப்படும். இதுவரை நடந்து முடிந்த நான்கு பிக் பாஸ் சீசன்களில் சர்ச்சைகளையும் சுவாரஸ்யங்களையும் ஏற்படுத்தும் சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளது.

முதல் சீசனின் ஆரவ்-ஓவியா இருவருக்கு மத்தியில் ஏற்பட்ட காதலும், அதன்பின் உண்டான சண்டையால் ஓவியா தற்கொலைக்கு முயன்றார். இதன் காரணத்தினால் ஓவியா பிக் பாஸ் வீட்டிலிருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். இவரைப்போலவே பரணி என்ற போட்டியாளரும் மன ரீயாக பாதிக்கப்பட்டு இதர போட்டியாளர்களின் நடவடிக்கையால் பிக்பாஸ் வீட்டை விட்டு தப்பி செல்ல முயன்றார். இதனால் இவரும் பிக்பாஸ் வீட்டில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்கள்.

arav-oviya-cinemapettai

இரண்டாவது சீசனில் மகத்-யாஷிகா இருவருக்குமிடையே ஏற்பட்ட காதல். ஆனால் அவர் பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்பே ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனாலும் பிக் பாஸ் வீட்டில் யாஷிகா உடன் நெருக்கம் காட்டியதால் மகத்தின் காதலி கடுப்பானார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மகத், அவர் காதலியை சந்தித்து அவரை சமாதானப் படுத்தி திருமணம் செய்துள்ளார். மேலும் ஐஸ்வர்யா தத்தா தனது போட்டியாளரான தாடி பாலாஜி மேல் குப்பைகளை கொட்டி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

thadi-balaji
thadi-balaji

மூன்றாவது சீசனில் நடிகை மதுமிதா தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு கொண்டுவந்தார். பிக்பாஸ் வீட்டின் விதிகளை மீறி தான் கூறிய கருத்தை நியாயம் என்று பிறரை ஒப்புக்கொள்ள வைப்பதற்காக கைகளை அறுத்துக்கொண்டார். இதனால் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். அத்துடன் நடிகர் சரவணன் பெண்களைப் பற்றிய இழிவான கருத்துக்களை தெரிவித்ததால், பிக் பாஸ் வீட்டில் இருந்து இவரும் பாதியிலேயே வெளியேற்றப்பட்டுள்ளார்.

madhu-bigg
madhu-bigg

மேலும் ஷெரின்-தர்ஷன் ஆகிய இருவரைப் பற்றி வாயாடி வனிதா தவறாக பேசியதால் பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த சீசனை பொருத்தவரை வனிதாவாலேயே விஜய் தொலைக்காட்சி டிஆர்பி ரேட்டிங்கில் முதன்மை வகித்து வந்தது என்றே சொல்லலாம். இவற்றையெல்லாம் தாண்டி, இந்த சீசனில் வாயாடி வனிதாவை, போலீசார் பிக்பாஸ் வீட்டிலேயே நுழைந்து விசாரணை நடத்தினர். இவை அனைத்து ரணகளத்திற்கு மத்தியில் கவின்-லாஸ்லியா இவர்களின் காதல் கதை பார்வையாளர்களுக்கு அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

kavin-losliya-cinemapettai
kavin-losliya

கடந்த நான்காவது சீசனில் சுரேஷ் சக்ரவர்த்தியுடன், செய்தி வாசிப்பாளர் அனிதாவும், சனம் ஷெட்டியும் கருத்து மோதல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சுரேஷ் சக்ரவர்த்தி தன்னை உடனடியாக பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றும் படி கூறி கதறி அழுதார். அதனைத் தொடர்ந்து சனம் ஷெட்டிக்கும், பாலாஜிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பாலாஜி, நடிகர் ஆரியுடன் பயங்கரமான சண்டையில் ஈடுபட்டார். அதேசமயம் பாலாஜி, நடிகை சிவானியுடன் நெருக்கமாக இருந்ததும், அவ்வப்போது சிறுசிறு ரொமான்ஸ்களில் ஈடுபட்டதும், அதனால் சிவானியின் தாயார் பிக்பாஸ் வீட்டிற்கே வந்து ரைடு விட்டதும் பார்வையாளர்களை பரபரப்பாக்கியது.

vanitha-01
vanitha-cinemapettai

இவைகளைப் போலவே இந்த சீசனிலும் – மோதல்களை ஏற்படுத்த கூடிய அந்த கதாபாத்திரம் யார் என்பதிலும், காதலில் ஈடுபடும் அந்த ஜோடி யார் என்பதிலும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகமொத்தம், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன்5 டிஆர்பி ரேட்டிங்கை அள்ளும் என்று பார்வையாளர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News