Nayanthara : நயன்தாரா நம்பர் ஒன் நடிகராக இருந்த நிலையில் இப்போது அவருக்கு படங்கள் சரிவர அமையவில்லை. பாலிவுட் சென்று ஜவான் படத்தில் வெற்றி கொடுத்தார். தமிழில் பெரிய அளவில் எந்த படங்களும் போகவில்லை.
சுந்தர் சி இயக்கத்தில் உருவாக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்திற்கான பூஜை பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது.
இதில் நயன்தாரா, குஷ்பூ, சுந்தர் சி, மீனா, தொகுப்பாளினி டிடி, ரெஜினா மற்றும் பலர் கலந்து கொண்டனர். எப்போதுமே தனது பட விழாவில் கலந்து கொள்ளாத நயன்தாரா மூக்குத்தி அம்மன் 2 பட விழாவில் கலந்து கொண்டது பேசுபொருளானது.
மீனாவின் சோசியல் மீடியா பதிவால் ஏற்பட்ட குழப்பம்

இந்த சூழலில் மூக்குத்தி அம்மன் 2 பட விழாவில் மீனாவை உதாசீன படுத்தி விட்டதாக இணையத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது. அதாவது அருகில் இருந்த குஷ்புவை கட்டியணைத்து சிரித்து பேசிய நயன்தாரா மீனாவை கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் நயன்தாராவை விமர்சித்து பலரும் இணையத்தில் வறுத்தெடுத்து வருகிறார்கள். மற்றொருபுறம் நயன்தாரா அப்படியெல்லாம் செய்யவில்லை என அவரது ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த சூழலில் மீனாவின் சோசியல் மீடியா ஸ்டோரி பலரின் கவனத்தை பெற்றிருக்கிறது.
மந்தையில் ஆடு இருக்கும்போது அதில் தனியாக இருக்கும் சிங்கம், ஆடு என்ன நினைக்கிறது என்பதை பற்றி எல்லாம் கவலைப்படாது என்று புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இது நயன்தாராவுக்காக இருக்குமோ என்ற சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.