செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

தொடர் தோல்விகளால் வந்த குழப்பம்.. தேடி போய் வாக்கு கொடுத்த தனுஷ்

தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் வாத்தி திரைப்படம் ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது. அதை தொடர்ந்து அவர் நடித்து வரும் கேப்டன் மில்லர் திரைப்படமும் பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தன்னை வளர்த்து விட்டவருக்கு தனுஷ் ஒரு வாக்குறுதி கொடுத்திருக்கிறாராம்.

தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என தன் முத்திரையை பதித்திருக்கும் தனுஷை அறிமுகப்படுத்தியது அவருடைய அண்ணன் செல்வராகவன் தான். அவர் இயக்கத்தில் வெளிவந்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் ஆகிய திரைப்படங்கள் தான் தனுஷுக்கு மிகப்பெரிய அடையாளத்தை உருவாக்கி கொடுத்தது.

Also read: தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் நான்கு 2ம் பாகம் படங்கள்.. எதிர்பார்ப்பை எகிறவிட்ட வடசென்னை

அந்த வகையில் இவர்கள் கூட்டணியில் சமீபத்தில் வெளிவந்த நானே வருவேன் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதிலும் இதற்கு முன்னதாக செல்வராகவன் இயக்கிய திரைப்படங்களும் பெரிய அளவில் போகவில்லை. அதனால் நானே வருவேன் திரைப்படத்தை தான் அவர் முழுதும் நம்பி இருந்தார்.

அதுவும் சொதப்பிய காரணத்தால் தற்போது பெரும் குழப்பத்தில் இருக்கும் செல்வராகவன் வீட்டில் கூட ஒரு வித இறுக்கமான மனநிலையில் தான் இருக்கிறாராம். மேலும் சமீபத்தில் அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் போடும் பதிவுகளும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், குழப்பத்தையும் கொடுத்து வருகிறது. அதிலும் கடந்த மாதம் அவர் போட்டிருந்த ஒரு பதிவை பார்த்து பலரும் தனுசுக்கு அடுத்தபடியாக இவரும் விவாகரத்து வாங்கி விட்டார் என்று கூறி வந்தனர்.

Also read: மனைவியால் நொந்துபோனரா செல்வராகவன்? சர்ச்சைக்குள்ளான பதிவிற்கு இதுதான் காரணம்.!

பின்னர் அதற்கான விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில் செல்வராகவனுக்கு என்ன தான் ஆனது என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்படி அவர் குறித்து பல செய்திகள் வருவதை பார்த்த தனுஷ் அவரை நேரில் சந்தித்து மணி கணக்கில் பேசியிருக்கிறார். ஒரு வெற்றி படத்தை கொடுக்க முடியவில்லை என்ற கோபத்தில் இருக்கும் செல்வராகவனிடம் தனுஷ் விரைவில் நாம் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என்று வாக்கு கொடுத்திருக்கிறாராம்.

அதுவரையில் எந்தவிதமான ட்வீட்டும் போட்டு யாரையும் குழப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டாராம். ஏனென்றால் செல்வராகவனின் இந்த மனநிலையை பார்த்து வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் கடும் அப்செட்டில் இருந்திருக்கிறார்கள். அதன் காரணமாகவே தனுஷ் இப்போது அவரை சமாதானப்படுத்தி இருக்கிறார். அந்த வகையில் விரைவில் இந்தக் கூட்டணியின் புதுப்பட அறிவிப்பு வெளிவரலாம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Also read: முழு சைக்கோவாக மாறிய செல்வராகவன்.. பல உண்மை சம்பவங்களை புட்டு புட்டு வைக்கும் பகாசூரன் ட்ரெய்லர்

Trending News