நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள தலைவர் 169 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் ரத்தக்கறையுடன் அருவாள் இருப்பது போன்ற போஸ்டர் வெளியாகி இருக்கிறது.
இதனால் தற்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஜெய்லர் படத்தின் கதையை கூறி வருகிறார்கள். அதாவது கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தை ரஜினி பார்த்துவிட்டு நெல்சன் இடம் இதுபோன்ற கதையை ஏற்பாடு செய்யுமாறு கூறியதாக தகவல் வெளியாகியிருந்தது.
அதாவது இப்படத்தில் ஒரு வில்லனாக ரஜினி நடிக்க ஆசைப்பட்டுயுள்ளார் என தெரிகிறது. இந்நிலையில் தலைவர் 169 படத்தின் போஸ்டரும் ரத்தக்கறையுடன் வெளியாகியுள்ளது. இதனால் பயங்கர ஆக்ஷன் கலந்த படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜெயிலர் படத்தில் சிவராஜ் குமார் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சிவராஜ் குமார் குற்றவாளிகளை பாதுகாக்கும் ஒரு ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், மிகப்பெரிய குற்றத்தை செய்து குற்றவாளியாக சிறையில் இருக்கும் ரஜினிகாந்தை பாதுகாப்பார் என்றும் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
ஆனால் ஒரு சிலர் படத்தின் டைட்டில் ஜெயிலர் என்று இருப்பதால் ரஜினி தான் ஜெயிலராக நடிக்கிறார் என்றும், சிவராஜ் குமார் தான் குற்றவாளியாக சிறைக்குள் வருவார் என கூறிவருகின்றனர். ஆனால் படத்தின் ட்ரெய்லர் வந்தால் மட்டுமே இது உறுதிபட தெரியவரும்.
ஆனால் கண்டிப்பாக ரஜினி இதுவரை நடிக்காத ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் படத்தில் தோன்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது போஸ்டர் வெளியாகி ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக உள்ள நிலையில் அடுத்த அடுத்த அப்டேட் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.