செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

வேட்டையன் படப்பிடிப்பில் ஏற்பட்ட தலைவலி.. செய்வதறியாமல் குழப்பத்தில் இயக்குனர்

Vettaiyan : சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி உள்ள லால் சலாம் படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில் லால் சலாம் படம் அடுத்ததாக வெளியாகிறது. ஆனாலும் இந்த படத்தை ரஜினியின் படம் என்று சொல்லிவிட முடியாது.

ஏனென்றால் லால் சலாமில் கேமியோ தோற்றத்தில் தான் ரஜினி நடிக்கிறார். ஆகையால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் தான் வேட்டையன். டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பாலிவுட் ஸ்டார் அமிதாபச்சன், ராணா, பகத் பாஸில், மஞ்சு வாரியார் போன்ற ஏகப்பட்ட திரை பிரபலங்கள் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திரா கடப்பா பகுதியில் நடைபெற்ற நிலையில் இப்போது ஹைதராபாத் சென்றிருக்கின்றனர். அங்கு ராமோஜி ஃபிலிம் சிட்டியில் செட் அமைத்து படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கின்றனர். இது வேட்டையன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பாகும்.

Also Read : விஜய், அஜித்தால் குஷியில் ஓடிடி.. தியேட்டர்களை காப்பாற்ற ஓவர் டைம் பார்க்கும் ரஜினி, கமல்

அதாவது ஹைதராபாத்திலும் ரஜினிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். ஏற்கனவே ராமோஜி ஃபிலிம் சிட்டி இப்போது டூரிஸ்ட் ஸ்பாட் ஆக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆகையால் பாகுபலி, புஷ்பா, ஆர்ஆர்ஆர் படங்களின் செட் போன்றவற்றை பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதி கொண்டிருக்கிறது.

ஆகையால் அங்கு ரஜினியின் படத்தின் சூட்டிங் நடத்துவது மிகவும் சிரமமாக இருக்கிறதாம். சூப்பர் ஸ்டாரின் படப்பிடிப்பு நடக்கிறது என்ற உடன் ரசிகர்கள் கூட ஆரம்பித்து விட்டனராம். இதனால் மிகுந்த தலைவலியில் டிஜே ஞானவேல் இருந்து வருகிறார். ஆகையால் வேட்டையன் படப்பிடிப்பை வேறு இடத்திற்கு மாற்றலாமா என்ற யோசனையில் இயக்குனர் உள்ளாராம்.

Also Read : AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாகும் 5 படங்கள்.. தலைவர் 171-ல் ரசிகர்களை உச்சி குளிர செய்ய போகும் ரஜினி

Trending News