வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சந்தானம் பாணியில் களம் இறங்கிய சதீஷ்.. சுந்தர் சி-யை மிஞ்சும் காஞ்சூரிங் கண்ணப்பன் ட்ரெய்லர்

Conjuring Kannappan Trailer: சதீஷ், ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் உருவான ‘காஞ்சூரிங் கண்ணப்பன்’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கியிருக்கும் இந்த படம் காமெடி கலந்த திரில்லர் ஜோனரில் எடுக்கப்பட்டிருக்கிறது.

முன்பு சந்தானம் தான் இது போன்ற படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுவார். இப்போது காமெடி நடிகரான சதீஷ் புது முயற்சியாக சந்தானம் பாணியில் ‘காஞ்சூரிங் கண்ணப்பன்’ படத்தில் ஹீரோவாக களம் இறங்கி உள்ளார். இதில் சதீஷ் உடன் நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்தராஜ், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தற்போது வெளியாகியிருக்கும் இந்த ட்ரெய்லரில் சதீஷ் தன்னுடைய கனவில் தினமும் ஒரு பேய் பங்களாவில் சென்று மாட்டிக் கொள்கிறார். அங்கு அவர் பேய் இடம் அடி வாங்குவது நிஜத்தில் வலிக்கிறது.

Also read: வந்தவுடனேயே உச்சாணிக்கொம்பில் பறந்த கிரண்.. 5 படங்கள் ஹிட் கொடுத்தும் கேரியரை தொலைத்த பரிதாபம்

ஒருவேளை அந்த கனவில் இறந்து விட்டால் நிஜத்திலும் இறந்து விடுவாய் என்று, படத்தில் டாக்டராக வரும் நாசர் பயமுறுத்துகிறார். இந்தப் பேய் கனவில் சதீஷ் உடன் மொத்த குடும்பமும் மாட்டிக் கொள்கிறது. அதிலும் சரண்யா, விடிவி கணேஷ், ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி கோஸ்டிகளால் கலகலப்பான மூடுக்கு மாறுகிறது.

இதில் காட்டப்படும் சில காமெடி காட்சிகள் நன்றாகவே கை கொடுத்துள்ளது. அதிலும் இறுதியில் ஆனந்தராஜ் பேசிய டயலாக் ஆனா ‘கற்பனைக்கு அப்பாற்பட்ட கன்டென்ட்ல கொலாபிரேட் பண்ணி விட்டு இருக்கீங்களே டா!’ என பேசியது அல்டிமேட் ஆக இருந்தது.

காமெடி கலந்த திரில்லர் படங்களை எடுக்கும் சுந்தர்.சி, லாரன்ஸை மிஞ்சும் அளவுக்கு இந்த படத்தின் டிரைலர் இருக்கிறது. ட்ரெய்லருக்கு கிடைத்த இதே வரவேற்பு படத்திற்கும் கிடைக்கும் என்று படக்குழு மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.

காஞ்சூரிங் கண்ணப்பன் ட்ரைலர் இதோ!

Also read: பொங்கலுக்கு போட்டி போட்டு கல்லாகட்ட வரும் 9 படங்கள்.. சிவகார்த்திகேயனை பதம் பார்க்க வரும் ரஜினி

Trending News