திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கமலை போல விஜய் சேதுபதிக்கு நடக்கும் சதி, சேற்றை வாரி இறைக்கும் பாலிவுட்.. இதே பொழப்பாகத் திரியும் பிரபலம்

Vijay Sethupathy: விஜய் சேதுபதி இப்போது பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார். ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்து முடித்துள்ள இவர் நடிப்பில் மேரி கிறிஸ்மஸ் என்ற படமும் உருவாகி வருகிறது. இந்நிலையில் பாலிவுட்டில் இவருடைய வளர்ச்சியை தடுப்பதற்கு சில சதி வேலைகள் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதாவது உமர் சந்து என்ற பிரபலம் விஜய் சேதுபதி, நடிகை கேத்ரினா கைஃப்புக்கு அந்தரங்க தொல்லை கொடுத்ததாக தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் விஜய் சேதுபதிக்கு ஆதரவாகவும் இவருக்கு எதிராகவும் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Also read: வளர்த்து விட்டவரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.. விஜய்க்கு மண்டையில் கொட்டுவைத்து புத்திமதி சொன்ன தயாரிப்பாளர்

மேலும் அவர் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பிரபலங்களைப் பற்றிய தவறான விஷயங்களை பதிவிடுவதை தான் வழக்கமாக வைத்திருக்கிறார். இதற்கு முன்பாக அவர் சமந்தாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் விவாகரத்து பற்றியும் கூட பல விஷயங்களை கூறியிருந்தார்.

இதற்கெல்லாம் ரசிகர்கள் சாதாரணமாக பதிலளித்து வந்த நிலையில் விஜய் சேதுபதியை அவர் சீண்டி இருப்பது பிரச்சனையை கிளப்பியுள்ளது. அது மட்டுமல்லாமல் பாலிவுட்டில் ஒரு தமிழனை வளர விடாமல் செய்வதற்காக இது போன்ற ஆட்களை வைத்து தேவையில்லாமல் சேற்றை வாரி இறைப்பதாகவும் கருத்துக்கள் எழுந்துள்ளது.

Also read: கேத்ரினா கைஃப்-க்கு அந்தரங்க டார்ச்சர் கொடுத்தாரா விஜய் சேதுபதி.? பயில்வான் போல் போட்டுடைத்த பிரபலம்

இதற்கு முன்பாக கமல் ஹிந்தி திரை உலகில் அதிவேகத்தில் வளர்ந்த போது அவரை ஓரங்கட்ட பல சதிவலைகள் பின்னப்பட்டது. இது பலரும் அறிந்தது தான். தற்போது அப்படி ஒரு நிலைமைதான் விஜய் சேதுபதிக்கு வந்து விட்டதாக அவருடைய ரசிகர்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் இந்த விஷயம் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விஜய் சேதுபதிக்கு கோரிக்கைகள் எழுந்து வருகிறது. அந்த வகையில் பிரபலங்களை பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லியே பொழப்பை ஓட்டி வரும் உமர் சந்துவுக்கு கடுமையான எச்சரிக்கையும் ரசிகர்கள் தரப்பிலிருந்து வந்து கொண்டிருக்கிறது.

Also read: கமலால் தாமதமாகும் பிக் பாஸ்.. கேஎஸ் ரவிக்குமாரை லாக் செய்த விஜய் டிவி

Trending News