பலர் டிக் டாக் மூலம் மக்கள் மத்தியில் நல்ல பெயரையும் பெற்று பிரபலமடைந்தனர் என்றே கூறலாம். அவ்வாறு டிக் டாக் மூலம் பிரபலமானவர்களின் எண்ணிக்கையில் பூஜா சவான் என்பவரும் ஒருவராவார்.
இவரின் அனைத்து வீடியோக்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதிகளவில் ரசிகர்களும் கிடைத்தனர். அதைத்தொடர்ந்து பீட் நகரை சேர்ந்த பூஜா சவான் ஆங்கிலம் பயில்வதற்கு பூனேக்கு சென்றுள்ளார்.
எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் பூஜா சவான். அதன் பின்னர் பூஜா சவானின் தற்கொலைக்கு மகாராஷ்டிரா மாநிலத்தின் வனத்துறை அமைச்சர் சஞ்சய் ரத்தோட் அவர்களுக்கு தொடர்பிருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் போலீசார் இந்த வழக்கினை விபத்து மரணம் என்று பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சிவசேனா அமைச்சருக்கு பூஜா சவான் தற்கொலையில் தொடர்பு இருப்பதாக ஒரு ஆடியோ ஆதாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.
அதனடிப்படையில் பாஜக கட்சி அமைச்சர் சஞ்சய் ரத்தோட்டை பதவி விலகக் கூறியுள்ளது. அத்துடன் சஞ்சய் ரத்தோட் தனது பதவியை ராஜினாமா செய்தால் மட்டுமே சட்டமன்றம் இயங்கும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர் பாஜக கட்சியினர்.
மேலும் நடிகை பூஜா சவான் அவர்களின் பெற்றோர் கூறியதாவது: ” சில நாட்களாகவே பூஜா சவான் மன அழுத்தத்துடன் காணப்பட்டதாகவும் அதனால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்” என்றும் தெரிவித்துள்ளனர்.