Bigg Boss Anshitha: பிக் பாஸ் சீசன் 8வது நிகழ்ச்சி தொடங்கி கிட்டத்தட்ட 87 நாட்களை தாண்டி வெற்றி பக்கம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் கிட்டத்தட்ட 14 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு தற்போது 10 போட்டியாளர்கள் வெற்றியை நோக்கி விளையாடி வருகிறார்கள். இந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது.
இதை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு போட்டியாளர்களும் மும்மரமாக விளையாடி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் கடந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி இருக்கிறார்கள். அதில் அன்ஷிதா மற்றும் ஜெஃப்ரி.
ஆனால் அன்ஷிதாவை பொருத்தவரை நாம் எப்படியும் டாப் 5 போட்டியாளர்களில் ஒருவராக வந்து விடுவோம் என்ற ஒரு எண்ணம் இருந்தது. ஆனால் இதுவரை அன்ஷிதா பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்ததே பெரிய விஷயம் தான். ஏனென்றால் வெளியே எடுத்திருந்த பெயர் அப்படி. சீரியல் நடிகர் அர்னாவ் உடன் சர்ச்சையில் சிக்கி கெட்ட பேர் வாங்கி இருந்தார்.
அந்த வகையில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஜோடியாக வந்த அர்னாவ் மற்றும் அன்சிதாவை பார்த்த மக்கள் வெறுப்பை தான் கொட்டினார்கள். அந்த வகையில் போன வேகத்திலேயே அர்னாவ் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அதற்கு அடுத்தபடியாக அன்ஷிதா தான் வெளியேறி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தந்திரமாக விளையாடி கிட்டத்தட்ட 80 நாட்களுக்கும் மேல் பிக் பாஸ் வீட்டிற்குள் தாக்கு பிடித்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் வெளியே எடுத்த பெயரையும் மறக்கடிக்கும் விதமாக வீட்டுக்குள் இருந்ததால் மக்களிடம் இருந்து கொஞ்சம் வரவேற்பும் கிடைக்க ஆரம்பித்து விட்டது.
அந்த வகையில் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்பதற்கு ஏற்ப நல்ல பெயரையும் சம்பாதித்து விட்டார். அதே நேரத்தில் சம்பளமும் எதிர்பார்த்து அளவிற்கு கிடைத்துவிட்டது. சீரியலில் 80 நாள் நடித்திருந்தால் கூட இந்த அளவிற்கு சம்பாதித்து இருக்க மாட்டார். ஆனால் அதைவிட அதிகமாகவே பிக் பாஸ் வீட்டிற்குள் சம்பாதித்து இருக்கிறார்.
அதாவது ஒரு நாளைக்கு 25 ஆயிரம் சம்பளம் பெற்று இருக்கிறார். அதன்படி மொத்தம் 87 நாட்கள் வீட்டுக்குள் இருந்ததால் 21 லட்ச ரூபாய் சம்பளத்தை வாங்கி இருப்பதாக தகவல் வெளியாயிருக்கிறது.