வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

பிக்பாஸ் OTT-யில் உறுதியான 3 வெறிகொண்ட போட்டியாளர்கள்.. தொகுத்து வழங்குவது யார் தெரியுமா?

தற்போது விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது இன்னும் இரண்டே வாரத்தில் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த சீசன் குறித்த அப்டேட் இணையத்தில் கசிந்துள்ளது. பிக்பாஸ் சீசன்5 முடிவடைந்த பின், ‘பிக்பாஸ் OTT’ பெயரில் விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யாமல் நேரடியாக ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களுக்கு மேல் ஒளிபரப்பாகும். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை வெறும் 70 நாட்களில் முடிக்க பிக்பாஸ் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அத்துடன் இந்த நிகழ்ச்சியில் புதிய போட்டியாளர்களை களம் இறக்காமல் ஏற்கனவே நடந்து முடிந்த ஐந்து சீசன்களில் யார் சுவாரஸ்யம் மிகுந்த போட்டியாளர்களாக இருந்தார்களோ, அவர்களை பிக் பாஸ் OTT-யில் கலந்து கொள்ள வைக்க உள்ளனர்.

மேலும் பிக் பாஸ் OTT நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ரசிகர்களுக்கு பிடித்தமான நபராக இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். எனவே ஓவியா ஏற்கனவே தேர்வான நிலையில், அவரைத் தொடர்ந்து அனிதா, வனிதா, ஜூலி ஆகிய மூவரும் பிக் பாஸ் OTT நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர்.

அத்துடன் பிக் பாஸ் OTT நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்கப் போகிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் பலருக்கு பிக்பாஸ் OTT நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்குவாரா? இல்லையா? என்ற சந்தேகம் நிலவிய நிலையில் தற்போது அதற்கான விடை கிடைத்தது.

எனவே பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி முடிந்தாலும் அடுத்து துவங்கவுள்ள பிக் பாஸ் OTT நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர். ஏனெனில் அதில் வம்பை வழியில் இழுத்துப் போட்டுக் கொள்ளும் வனிதா இருப்பதால் நிகழ்ச்சி நிச்சயம் சண்டை சச்சரவுக்கு பஞ்சமிருக்காது.

அத்துடன் ஜூலி-ஓவியா காமினேஷன் பிக் பாஸ் சீசன்1-ல் வேற லெவலுக்கு ரீச் ஆனதால், அவர்கள் இருவரையும் பிக்பாஸ் OTT-யில் மீண்டும் ரசிகர்கள் காண உள்ளனர். அத்துடன் பிக்பாஸ் சீசன்4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான அனிதா, தற்போது ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருக்கிறார். அவரும் பிக்பாஸ் OTT-யில் கலந்து கொண்டு நிகழ்ச்சியின் சுவாரசியத்தை கூட்டம் உள்ளார்.

Trending News