ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

டபுள் எவிக்ஷனில் வெளியேறப் போகும் போட்டியாளர்கள்.. பிக் பாஸ் ரூல்ஸ் படி வெற்றி பெறும் போட்டியாளர் இவர்தான்

Bigg Boss Tamil 8: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பிக் பாஸ் சீசன் 8 முடிவதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கிறது. ஆனால் உள்ளே கிட்டத்தட்ட 10 போட்டியாளர்கள் இருப்பதால் இந்த வரமும் டபுள் எவிக்சன் பண்ணப் போகிறார்கள். கடந்த சில வாரங்களாகவே இரண்டு போட்டியாளர்கள் வெளியாகி போன நிலையில் இந்த வாரம் யார் போக போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

ஏனென்றால் தற்போது இருக்கும் போட்டியாளர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. யாருக்கு அதிகமான வாக்குகள் இருக்கிறது, யார் குறைவான வாக்குகளை பெற்றிருக்கிறார் என்று யூகிக்க முடியாத அளவிற்கு தான் சின்ன சின்ன வித்தியாசங்கள் இருந்து கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் மிகக் கடுமையாக நடைபெற்றது. இதில் முத்துக்குமார் தான் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் ஒரு சில மார்க் அடிப்படையில் ரயான் வெற்றி பெற்று டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் வெற்றிகரமாக முடித்திருக்கிறார். அந்த வகையில் இவர் நேரடியாக டாப் 5 இடத்திற்கு தகுதி ஆகிவிட்டார்.

இவருக்கு அடுத்தபடியாக இந்த வாரம் நாமினேஷனில் இருக்கும் போட்டியாளர்கள் யார் என்றால் தீபக், ஜாக்குலின், ரயான், ராணவ், பவித்ரா, அருண், விஷால், மஞ்சரி. இதில் தீபக்கு அதிகமான ஓட்டுகள் கிடைத்து முதலிடத்தில் இருக்கிறார். அடுத்ததாக ராணவ், விஷால் மற்றும் ஜாக்குலின் நடுநிலையான வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தில் அடுத்தடுத்ததாக இருக்கிறார்கள்.

இவர்களைத் தொடர்ந்து கம்மியான ஓட்டுகளை பெற்றிருக்கும் போட்டியாளர் மஞ்சரி, பவித்ரா மற்றும் அருண். அந்த வகையில் தன்னுடைய கருத்துக்களை பிடிவாதமாக முன்னிறுத்தி பேச்சு திறமையால் வென்றுவிடலாம் என்று நினைத்து வரும் மஞ்சரி தான் முதல் ஆளாக இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார்.

இவருக்கு அடுத்ததாக பவித்ரா மற்றும் அருண் கம்மியான ஓட்டுகளை பெற்றிருக்கிறார்கள். ஆனால் அருண் போவதற்கு வாய்ப்பு இல்லை அதனால் பவித்ரா இந்த வாரம் டபுள் எவிக்ஷனில் பிக் பாஸ் வீட்டை விட்டு கிளம்பி விடுவார். மேலும் தொடர்ந்து ஏழு சீசனங்களாக வெற்றி பெற்று இருப்பது ARM வரிசைப்படி தான்.

அந்த வகையில் இந்த சீசனில் R பெயர் எழுத்து உள்ள போட்டியாளர் தான் வெற்றி பெறுவார்கள் என்று ஒரு புரளி கிளம்பி வருகிறது. இதன்படி பார்த்தால் ராணவ் மற்றும் ரயான் தான் வின் பண்ணுவதற்கு வாய்ப்புகள் இருப்பது போல் தெரிகிறது. மேலும் இவர்களில் மக்கள் ஓட்டு அதிகமாக இருப்பது ராணவிற்க்தான். அதனால் இந்த சீசனில் ராணவ் வெற்றியாளராக வர போகிறார்.

Trending News