நீட் தேர்வால் தொடர்ந்து ஏமாற்றம்.. உள்குத்து வேலை, கொந்தளிக்கும் சீமானின் தம்பி

NEET Exam: நீட் தேர்வு என்றால் 13 மாநிலங்களில் பொதுவான ஒரே மாதிரியான தேர்வுகள் நடத்தப்படும் மருத்துவ மற்றும் இளங்கலை சேர்வதற்கான நுழைவு தேர்வு. ஆனால் இதனால் வருஷ வருஷம் ஏதாவது பிரச்சனைகள் வெடித்துக் கொண்டே வருகிறது. இதைக் கண்டும் காணாமல் மேலிடத்தில் இருப்பவர்கள் அலட்சியப்படுத்தி வருகிறார்கள். அதனால் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பது இங்கே இருக்கும் மாணவர்கள்தான்.

அந்த வகையில் இன்று வெளியான தேர்வுகளின் முடிவுகளில் பல குளறுபடிகள் ஏற்பட்டு இருப்பதாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நீட் தேர்வில் நாடு முழுவதும் 67 பேர் 720 க்கு 720 வெற்றி பெற்றிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. அதனால் மறுத்தேர்வு நடத்த கோரி தமிழக முழுவதும் பல்வேறு பகுதியிலிருந்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

உண்மையை உரைக்கச் சொன்ன சீமானின் விசுவாசி

சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அப்பொழுது மாணவர்களை போலீசார் அப்புறப்படுத்தும் போது மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் இப்படிப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்யும் படி கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் நீட் தேர்வால் தொடர்ந்து ஏமாற்றும் அடையும் தமிழக மாணவர்கள் நிலைமையை உரைக்க சொல்லியிருக்கிறார் சீமானின் தம்பி சாட்டை துரைமுருகன்.

அதாவது இந்தியா முழுவதும் நடக்கும் பொதுவான தேர்வு நீட் தேர்வு. ஆனால் கேள்விகள் வெவ்வேறு விதமாகவும் தூத்துக்குடியில் இருக்கும் சில மையத்தில் மட்டும் கேள்விகள் முன்னுக்கு பின்னும் முரண்பாடாக அமைந்திருக்கிறது. தகுதியான மருத்துவர்களை தேர்ந்தெடுப்பதற்காகத் தான் இந்த நீட் தேர்வு என்று பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரசும் ஆதரிக்கிறார்கள்.

ஆனால் வடநாட்டு மாநில மாணவர்களை தள்ளுவதும் தமிழ்நாட்டு மாணவர்களை மருத்துவர்கள் ஆக ஆக்கவிடாமல் தடுப்பதற்காகத் தான் இந்த நீட் தேர்வு இருக்கிறதா?என்று அவருடைய கேள்வியை முன் வைத்திருக்கிறார். அந்த வகையில் வடநாட்டு மாணவர்கள் எழுதிய நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை வழங்கி இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டு மாணவர்கள் நல்லா எழுதியும் அதில் மதிப்பெண்கள் வரவில்லை என்றால் இதில் நிச்சயமாக முறைகேடு நடந்திருக்கிறது என்று சொல்கிறார்.

இதனால் தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வை கொண்டாடுபவர்கள், நீட் தேர்வால் மட்டும் தான் தகுதியான மருத்துவர்கள் கிடைப்பார்கள் என்று நினைப்பவர்கள் இந்த குளறுபடிக்கு என்ன ஒரு தீர்வு சொல்லப் போகிறார்கள் என்று கொந்தளிப்புடன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்து இருக்கிறார் சீமானின் தம்பி மற்றும் விசுவாசி சாட்டை துரைமுருகன்.

Next Story

- Advertisement -