எப்போதுமே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் வளைய வருபவர் தான் அந்த இயக்குனர். ஆரம்பத்தில் மதிப்பும், மரியாதையும் மிக்க ஒருவராக இருந்த அவர் தற்போது எது செய்தாலும் பிரச்சனையாக தான் போய் முடிகிறது. அதற்கேற்றார் போல் அந்த இயக்குனரும் பலரும் முகம் சுளிக்கும் வகையில் சில வேலைகளை செய்து வருகிறார்.
இதனால் சோசியல் மீடியாவில் பலரும் அவரை கேவலமாக கழுவி ஊற்றுகின்றனர். ஆனாலும் தான் செய்வது தான் சரி என்ற ரீதியில் இயக்குனர் கொடுக்கும் அலப்பறை பலருக்கும் கடுப்பை தான் வரவழைக்கிறது. அதன்படி சமீபத்தில் இயக்குனர் நடிகை ஒருவருடன் மிகவும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட போட்டோ சோசியல் மீடியாவையே பற்றி எரிய வைத்தது.
அதிலும் அந்த நடிகையை உரசுவதும், தடவுவதும் என்று இயக்குனர் செய்த சேட்டை கொஞ்சம் நெஞ்சம் அல்ல. இதையும் வெட்கம் இல்லாமல் சோசியல் மீடியாவில் வெளியிட்டு அதற்கும் ஒரு வியாக்கியானம் பேசினார். இப்படி அருவருப்பான விஷயங்களை செய்யும் அந்த இயக்குனர் தற்போது மைனர் குஞ்சு ரேஞ்சுக்கு ஒரு விஷயத்தை செய்துள்ளார்.
அதாவது சமீபத்தில் அவர் கையில் மல்லிகை பூவை சுற்றிக்கொண்டு சரக்கு பாட்டில் சகிதம் ஒரு போட்டோவை வெளியிட்டு இருந்தார். அதிலும் ஒரு பெண்ணின் கையை தன் கன்னத்தில் வைத்து தடவுவது போல் போஸ் கொடுத்திருந்தார். இதுதான் தற்போது சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
மேலும் சதா சர்வ காலமும் இப்படி கில்மா போட்டோக்களை வெளியிட்டு வரும் இயக்குனரை பலரும் கண்டபடி திட்டி தீர்க்கின்றனர். அதிலும் அறுபது வயதை கடந்திருக்கும் இந்த இயக்குனர் காலம் போன காலத்தில் இப்படி அருவருப்பான வேலையை செய்து வருகிறார். ஒரு காலத்தில் டாப் இயக்குனர்களின் பட்டியலில் இருந்த இவர் இந்த அளவுக்கு தரம் இறங்கி போனது பலரையும் அதிர்ச்சியாக்கி உள்ளது.
Also read: பணத்துக்காக பெத்த மகளையே தொழிலுக்கு இழுத்து விட்ட அம்மா.. சைக்கோ நடிகரிடம் சின்னாபின்னமான நடிகை