புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பாத்ரூமில் வெடித்த பிரச்சனை.. மூன்று பேரில் யார் பக்கம் நியாயம் இருக்கு?

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் இதுவரை நடந்திராத குடுமிப்பிடி சண்டை நேற்று அரங்கேறியது. ஏனென்றால் பஞ்சதந்திர நாணயத்தை வைத்திருக்கும் 5 பேரிடம் அதை அபகரிக்கும் நோக்கத்தில் பிக்பாஸ் வீட்டில் ஒரு சிலர் திட்டமிட்டுள்ளனர். அந்த ஐந்து பேரில் தாமரையிடம் மட்டுமே எளிதாக நாணயத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று சுருதி தக்க சமயம் எதிர்கொண்டு காத்திருந்தார்.

ஆகையால் அவர் குளித்துவிட்டு துணி மாற்றும் இடத்தில் சுருதி மற்றும் பாவனி இருவரும் பக்கா பிளான் போட்டு தாமரை துணி மாற்றும் போது அவருக்கு தெரியாமல் காற்று நாணயத்தை எடுத்து விட்டனர். உடனே தாமரை சுருதியிடம், ‘என்ன பாப்பா இப்படியெல்லாம் பண்ணிட்ட’ என்று அவருடைய பாணியில் இன்னசென்ட் ஆக கேட்டுள்ளார். இதுவே பேரு ஒருவர் என்றால் கேமரா முன்னாடி சென்று ‘துணி மாற்றும் அறையில் எனக்குத் தெரியாமல் என்னுடைய நாணயத்தை எடுத்து விட்டனர்’ என்று கூப்பாடு போட்டிருப்பார்.

ஆனால் தாமரை அவ்வாறு செய்யாமல், உங்க மேல பாசம் வைத்தேனே பாப்பா, கேட்டிருந்தால் கூட கொடுத்து இருப்பேன் என்று கூறியது பிக்பாஸ் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. அதன் பிறகு தாமரைக்கு தான் ஏமாந்து விட்டோமே என்ற உறுத்தலில் அழுது கொண்டே இருந்துள்ளார். ஏனென்றால் சுருதிக்கு உதவி செய்யும் வகையில் தாமரையை பாவனி துண்டை வைத்து மறைத்து நாணயத்தை எடுத்துச் செல்ல உதவியிருக்கிறார்.

அதன்பிறகு தாமரை அழுதுகொண்டே அவர்களை திட்டிய போது, இப்படி எல்லாம் பேசாதீர்கள் என்றும் வார்த்தையை விடாதீர்கள் என்றும் தாமரையிடம் வாதிட்டு தன்னுடைய இமேஜ் டேமேஜ் ஆகிட கூடாது என்பதில் பாவனி  உறுதியாக இருந்தார். இதைப் போன்றுதான் பிரியங்கா, சின்ன பொண்ணுவை உடைமாற்றும் அறைக்கு அழைத்துச் சென்று அவரை தனியாக சோதனையிட்டதை கடந்த வாரம் கமல் வெளுத்து வாங்கியது போல இந்த வாரம் தாமரையை உடைமாற்றும் அறையில் திட்டமிட்டு சதி செய்த பாவனி மற்றும் சுருதியை வன்மையாக கண்டிக்க வேண்டும் என்ற பிக்பாஸ் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

bb5-cinemapettai5
bb5-cinemapettai5

குறிப்பாக பாவனி செய்தது மிகப் பெரிய தவறு. ஏனென்றால் நகரத்தில் இருக்கும் பெண்களை விட கிராமத்தில் வளர்ந்த பெண்களுக்கு எதார்த்தம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதை பயன்படுத்தி தாமரையை ஏமாற்றி நாணயத்தை பறித்தது சரியல்ல.

பிக்பாஸ் நிகழ்ச்சியை கொஞ்சம் நாகரிகத்தோடு விளையாட வேண்டும். அவ்வாறு பாவனி செய்ய தவறிவிட்டார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு கேம் என்றாலும் அதில் மூலம் போட்டியாளர்களின் தனித்துவமான குணாதிசயம் வெளிப்படும். ஆகையால் அதை மனதில் வைத்து விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

Trending News