சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

18 நாளில் எடுக்கப்பட்ட சர்ச்சைக்குரிய படம்.. ப்ளூ சட்டை மாறன் பட்ஜெட்டை கேட்டா ஷாக்கா இருக்கு

எந்த திரைப்படம் வெளியானாலும் அந்தத் திரைப்படத்தை யார் இயக்கியுள்ளார் என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல் மனதில் பட்டதை பேசும் யூடியூபர் ப்ளூ சட்டை மாறன் சோசியல் மீடியாவின் மூலம் பிரபலம் அடைந்தவர். இவர் தனது யூடியூப் சேனல்களில் திரைப்படங்களை விமர்சித்தது மூலம் பலருடைய விமர்சனங்களை பெற்றுக் கொண்டிருக்கிறார்.

எனவே திரைப்படம் ஒன்றை எடுத்தால் தான் அதனுடைய கஷ்டம் நஷ்டம் தெரியும் என பலர் கூறி வந்த நிலையில், ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய மனதில் ரொம்ப காலமாகவே அழுத்திக் கொண்டிருந்த ஆழமான திரைக்கதை ஒன்றை தானே இயக்கி நடித்து இசையமைக்க முடிவெடுத்தார். அந்தப் படம்தான் கடந்த டிசம்பர் 10ஆம் தேதி வெளியான ஆன்டி இண்டியன் என்ற திரைப்படம்.

இந்தப் படத்தை ப்ளூ சட்டை மாறன் வெறும் 18 நாளில் எடுத்து முடித்துள்ளார். அத்துடன் இந்தப் படத்திற்கான பட்ஜெட் கூட ஒரு கோடியை தாண்டவில்லை. இப்படி படத்தையும் உருவாக்குவதற்கும் அதற்கான பொருட் செலவையும் மிகைப்படுத்திக் கொள்ளாமல் எளிமையான முறையில் எடுக்கப்பட்ட ஆன்டி இண்டியன் திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த படம் வெளிவருவதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பினாலும், அதையெல்லாம் சமாளித்து ஆன்டி இண்டியன் படத்தின் தயாரிப்பாளர் ஆதம் பாவா மற்றும் இயக்குனர் ப்ளூ சட்டை மாறன் இருவரும் திரையரங்கில் வெற்றிகரமாக படத்தை திரையிட்டனர்.

இந்தப்படத்தின் சிறப்பு அம்சமாக கருதப்படுவது படத்தின் கதையே. ஏனென்றால் இந்து, முஸ்லிம், கிறிஸ்டின் ஆகிய மதத்தினரின் சமய சடங்குகளை அதிகார வர்க்கமும் அரசியல்வாதிகளும் எவ்வாறு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதை முகத்தில் அறைந்தார் போல் துணிச்சலுடன் சொன்னவிதம் பலரால் பாராட்டப்படுகிறது.

இவ்வாறு வேறுபட்ட மதத்தினரின் உணர்வுகளை வெளிப்படுத்திய ஆன்டி இண்டியன் திரைப்படம் சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற வெளிநாட்டு திரையரங்குகளில் திரையிட தயங்கினாலும், அதன் பிறகு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தற்போது ரிலீசாகி கொண்டிருக்கிறது.

Trending News