சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பிரியங்கா அந்த விஷயத்திற்கு லாயக்கே இல்லை.. கழுவிக் கழுவி ஊற்றிய பிக்பாஸ் போட்டியாளர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் தற்போது நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த டாஸ்கின் மூலம் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஒருவர் மற்றவரை பழி தீர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஏனென்றால் பிக் பாஸ் நேற்றைய நிகழ்ச்சியில் யார் யார் சுயமாக விளையாடுகின்றனர்? யார் கைப்பாவையாக செயல்படுகின்றனர்? யார் சுயம் புத்தியே இல்லாமல் செயல்படுகின்றனர்? என போட்டியாளர்களை பட்டியலிட சொன்னார்.

உடனே போட்டியாளர்கள் அனைவரும் தங்களுடைய கருத்துக்களை மாறிமாறி பதிவிட்டனர். அப்போது பெரும்பாலான போட்டியாளர்கள் பிரியங்காவிற்கு சுத்தமா செய்ய புதிய இல்லை என்று மூஞ்சியில் அடித்தார் போல் பேசினர்.

அதேபோன்று மதுமிதாவை கைப்பாவையாக செயல்படுகின்றார் என குற்றம் சாட்டினர். ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் அடிதடி கலகம் எல்லாம் அரங்கேறிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் பிக் பாஸ் தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போல் போட்டியாளர்களுக்கு விதவிதமான டாஸ்க்களைக் கொடுத்து சீண்டிப் பார்க்கிறார்.

இதனால் 5 வாரம் நிறைவடைந்த நிலையில் ஆறாவது வாரத்தில் தொடங்கியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவ்வளவு நாள் அமைதியாக இருந்த போட்டியாளர்கள் கூட அடாவடி செய்ய ஆரம்பித்து விட்டனர்.

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சி கொஞ்சம் சூடு பிடித்ததால் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு நாளும் ஆர்வத்துடன் கண்டு களிக்கின்றனர்.

Trending News