அந்தரப்புரத்து பெண்களுக்குச் சேவை செய்ய வந்தாங்க! கஸ்தூரியின் சர்ச்சை பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம்

kasthuri
kasthuri

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி. இவர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆதரவாளராக இருந்த நிலையில், தற்போது பாஜக ஆதரவாளராகவும், திராவிட கட்சிகளுக்கு எதிராக கருத்துகள் கூறி வருவதுடன், சமூக ஆர்வலராகவும் இருக்கிறார். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

பிராமணர்களுக்கு தனிச்சட்டம் கோரிக்கை குறித்த போராட்டம்

இந்த நிலையில் சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் பிராமணர்களுக்கு தனிச்சட்டம் கோரிக்கை குறித்த போராட்டம் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கஸ்தூரி, ”300 வருடங்களுக்கு முன்பு மன்னர்களின் அந்தரப்புரத்து பெண்களுக்குச் சேவை செய்ய வந்தவர்கள் தெலுங்கு பேசுபவர்கள். அவர்கள் எல்லாம் இன்றைக்கு தமிழர்கள் இனம் அப்படின்னு சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை எல்லாம் தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்கள் யாருங்க தமிழர்கள்?” என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

கஸ்தூரி அளித்த விளக்கம்

கஸ்தூரியின் பேச்சு சர்ச்சையான நிலையில் இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் பேசியதாவது:

’’அந்தப்புரம் குறித்து தெலுங்கு இனத்தை நான் குறிப்பிட்டுக் கூறவில்லை. திராவிட சிந்தாந்தம் பற்றிப் பேசுபவர்களைத்தான் கூறினேன். பிரமாணர்களைச் சொல்பவர்களை நான் தான் கூறினேன். ராதா தர்பாரின்போது, ஆடல் அரசியலுக்கு இசை மற்றும் சங்கீத வாத்தியங்களை வாசிப்பவர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள்?’’ என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் ’’திருப்பதி லட்டை தின்னவர்கள் தானே நீங்கள் மாட்டுக்கறியை திங்கலாமே என சொன்னபோது ஊடகவியலாளர்கள் அப்போது எங்கே போனீர்கள்’’ என்று கேள்வி எழுப்பினார். அதைத்தொடர்ந்து, ’’நாத்திகர்கள் கொக்களிக்கின்றனர். சிறுபான்மையினர், பெரும்பான்மையினரை பழிவாங்கிப் பேசக்கூடாது. தெலுங்கு மக்களுக்காக நான் பேசுகிறேன். எனக்கு அதற்கு உரிமையுள்ளது.

சுதாகர் ரெட்டி, அமர்பிரசாத் ரெட்டி போன்றோர் என் கருத்தை தவறாகப் புரிந்துகொண்டனர். தங்கள் சாமியை வீட்டில் கும்பிட்டுவிட்டு, யாகம் செய்துவிட்டு, வெளியே வந்து நாத்திகம் பேசுபவர்கள் திமுகவும், திராவிட கழகர்களும்தான். இங்குள்ள திராவிட இயக்கங்கள், அரசியல் கட்சிகர்கள் அனைவரையும் பிரித்துப் பார்க்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

தெலுங்கர்கள் பற்றிய கஸ்தூரியின் பேச்சுக்கு நேற்று தமிழக பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெலுங்கிலேயே பேசி கஸ்தூரிக்கு கண்டனம் தெரிவித்தார். இன்று கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி 200 பெண்கள் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement Amazon Prime Banner