எப்போதுமே தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போன அந்த நடிகர் சமீபகாலமாக எந்தவொரு சர்ச்சையிலும் சிக்காமல் இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இவ்வளவு ஏன் அந்த நடிகருக்கே இது ஆச்சரியமாக இருக்கிறதாம்.
நம்மள பத்தி இவ்வளவு நாளா ஒரு சர்ச்சை கூட வரவில்லை, ஏன் என யோசித்து வருகிறாராம். இப்படியிருக்கையில் தன்னுடைய முன்னாள் காதலியுடன் விமான ஓட்டுநர் வேடத்தில் நடித்த ஒரு படம் ரிலீசுக்கு ரெடியாகி உள்ளது.
ஆனால் கடைசி நேரத்தில் அந்த நடிகரின் முந்தைய படங்கள் போல் ரிலீஸ் பிரச்சனையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த முறை அந்த நடிகரின் மீது எந்த தவறும் இல்லையாம்.
சொன்ன தேதியில் சரியாக நடித்துக் கொடுத்து விட்டாராம். ஆனால் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் இடையே புகைச்சல் உள்ளது என்கிறார்கள். இயக்குனரோ இன்னும் 10 நாட்கள் ஷூட்டிங் பாக்கி இருக்கிறது என்று கூறுகிறாராம்.
ஆனால் தயாரிப்பாளரோ எடுத்த வரைக்கும் எடிட் பண்ணி ரிலீஸ் செய்து விடுங்கள் என கட்டளையிட்டு விட்டாராம். இதனால் படத்தை வெளியிட இயக்குனர் செய்த சித்து வேலை தற்போது பலருக்கும் தலைவலியாக அமைந்துள்ளது.
மேலும் அந்த நடிகரை இந்த படத்தில் சேர்க்க வேண்டாம் என தலையாலேயே அடித்து கொண்டேன், கேட்டீர்களா என சர்ச்சை நடிகர் மீது பழியை போட்டு இயக்குனரை கடுப்பேற்றி வருகிறாராம் தயாரிப்பாளர். ஆனால் அந்தப் படத்தின் நாயகியோ தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பது போல பொட்டியை கட்டிக்கொண்டு வடக்கே கிளம்பி விட்டாராம்.