வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அவரு தளபதின்னா நீங்க சின்ன தளபதியா.? கூட்டத்தில் வெடித்த சர்ச்சை, வலது கையை கூப்பிட்டு கடித்துக் குதறிய விஜய்

Actor Vijay: விஜய்க்கும், சர்ச்சைக்கும் எப்பவும் ஏக பொருத்தமாக இருக்கிறது. அதில் சூப்பர் ஸ்டார் பெயரை வைத்து கிளம்பிய பிரச்சனைக்கே முடிவு தெரியாத நிலையில் தற்போது வலது கையால் அடுத்த ஏழரை ஆரம்பித்து இருக்கிறது.

அண்மைக்காலமாகவே விஜய்யின் அரசியல் நகர்வுக்கான வேலைகள் பகிரங்கமாக நடைபெற்று வருகிறது. அதில் தற்போது அவருடைய வலது கையாக செயல்படும் புஸ்ஸி ஆனந்த் பெண் நிர்வாகியிடம் கூறிய ஒரு விஷயம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read: டிக்கெட் புக்கிங்கில் ஜெயிலர் சாதனையை முறியடித்த லியோ.. அப்போ 1000 கோடி வசூல் உறுதியா.?

இன்று விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஒரு பெண் நான் விஜய்யின் தீவிர ரசிகை என்று கூறினார். உடனே புஸ்ஸி ஆனந்த் தலைவனை பெயர் சொல்லி கூப்பிடக்கூடாது, தளபதின்னு சொல்லுங்கள் என கண்டித்தார்.

இந்த விவகாரம் தான் இப்போது சோசியல் மீடியாவில் கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது. இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள இவ்வளவு அலப்பறையா என்று பலரும் இது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் அவரு தளபதின்னா நீங்க சின்ன தளபதியா என கிண்டல் அடித்து வருகின்றனர்.

Also read: போற போக்க பாத்தா லியோவுக்கு டஃப் கொடுப்பார் போல.. சஞ்சய் லிஸ்ட்டில் இருக்கும் 3 ஹீரோக்கள்

ஏற்கனவே புஸ்ஸி ஆனந்த் தான் விஜய்யின் நற்பெயரை கெடுக்கிறார் என்ற விமர்சனம் இருக்கிறது. அதனால் இவரை பக்கத்திலேயே சேர்க்காதீர்கள் என்று கூட அவருடைய ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இந்த சூழலில் மீண்டும் அவர் பெரும் பிரச்சனைக்கு காரணமாக அமைந்திருக்கிறார்.

இதனால் கடுப்பான விஜய் தேவையில்லாமல் மக்கள் முன் இது போன்ற வேலையை செய்ய வேண்டாம் என்று அவரை கடித்து குதறி உள்ளாராம். இனிமேல் இது தொடர்ந்தால் நடவடிக்கை வேற மாதிரி இருக்கும் என்று உச்சகட்ட கோபத்தில் கத்தியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

Also read: பழக்க வழக்கெல்லாம் புறவாசலோட போயிரணும்.. தம்பியை தவிர மற்ற இயக்குனர்களை மதிக்காத விஜய்

Trending News