வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

லியோ படத்தால் மாமன்னனுக்கு ஏற்பட்ட சிக்கல்.. விஜய்க்கு மட்டும் நடக்கும் அநியாயம்

Maamanan Controversy: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் படம் மாமன்னன். மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த சூழலில் லியோ படத்தால் மாமன்னன் படத்திற்கு ஒரு பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

அதாவது மாரி செல்வராஜ் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார். இதனால் லியோ படத்திற்கும் இந்த படத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கும் என்று பலரும் யோசிக்க நேரிடும். அதாவது மாமன்னன் படத்தில் வில்லனாக மிரட்டி இருக்கிறார் நடிகர் பகத் பாசில்.

Also Read : 2வது நாளில் ஆட்டம் கண்ட மாமன்னன் வசூல்.. மாரி செல்வராஜால் மோசம் போன உதயநிதி

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் இவரை தான் இயக்குனர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். அதன்படி மாமன்னன் படத்திலும் பிச்சு உதறி இருந்தார். ஆனால் இந்த படம் முழுக்க பகத் பாசில் புகை பிடிக்கும் காட்சி நிறைய இடம் பெற்றிருந்தது.

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் முதல் பாடலில் விஜய் சிகரெட் பிடிக்கும் போஸ்டர் வெளியானதால் பிரளயமே வெடித்தது. மேலும் விஜய் சிகரெட் பிடிப்பதால் இளைஞர்கள் தவறான வழியை தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருப்பதாக விவாதமும் சென்றது.

Also Read : உண்மையான மாமன்னன் தனபாலுக்கு நடந்த அவமானம்.. உதயநிதியின் விரலை வைத்து அவர் கண்ணை குத்திய மாரி செல்வராஜ்

அதன் பிறகு லியோ பாடலில் புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்ற வாசகம் போடப்பட்டது. இவ்வாறு பகத் பாசில் புகைபிடிக்கும் போது எதிர்ப்பு கிளம்பாத நிலையில் விஜய்க்கு மட்டும் ஏன் இவ்வாறு அநியாயம் நடக்கிறது என தளபதி ரசிகர்கள் கொந்தளிக்க தொடங்கியுள்ளனர். இதனால் மாமன்னன் படத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

அதாவது அந்த படத்தில் பகத் பாசில் வில்லன் கதாபாத்திரம் என்பதால் புகை பிடித்தல் போன்ற சில கேட்ட பழக்கங்கள் இருப்பதாக காண்பிக்கப்படுகிறது. ஆனால் ஹீரோவாக இருக்கும் விஜய் இவ்வாறு செய்வது மிகவும் தவறு என பலரும் இந்த விமர்சனத்திற்கு பதில் கொடுத்து வருகிறார்கள்.

Also Read : நா ரெடியா பாடல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த லியோ பட குழு.. புலி பதுங்குறது பாயிறதுக்கு தான்

Trending News