சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

சர்ச்சையில் சிக்கிய இளையராஜா.. சுயமரியாதை விட்டுக் கொடுப்பவன் அல்ல, முற்றுப்புள்ளி வைத்த இசைஞானி

Ilaiyaraja controversy: விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டார்கோவிலில் நேற்று இளையராஜா அவருடைய ஆல்பமான திவ்ய பாசுரங்கள் இசைக்கப்பட்டு மாலையில் நாட்டியஞ்சலி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இளையராஜா சென்றிருந்தார். அப்பொழுது அவருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு கொடுத்து மாலை அணிவித்து பரிவட்டம் கட்டி வரவேற்று இருந்தார்கள்.

அடுத்ததாக இளையராஜா அவருடைய நிகழ்ச்சியை ஆரம்பித்த நிலையில் அங்கு வந்த ரசிகர்கள் அனைவரும் ஆர்ப்பரித்து அவர்களுடைய உற்சாகத்தை கொடுத்தார்கள். அதெல்லாம் முடிந்த நிலையில் ஆண்டாள் கோவிலுக்குள் இளையராஜா சென்றார்.

அப்பொழுது கருவறை என்று சொல்லப்படும் மூலஸ்தானத்துக்கு முன்பாக இருக்கும் அர்த்தமண்டபத்திற்குள் ஆன்மீக ஐயங்கார்ர்களுடன் இளையராஜா அடி எடுத்து வைத்தார். ஆனால் அப்படி இளையராஜா அடி எடுத்து வைக்கும் பொழுது உடனே அங்கு இருப்பவர்கள் இளையராஜாவை உள்ளே விடாமல் தடுத்து விட்டார்கள்.

அதற்கு காரணம் ஆண்டாள் கோவிலின் மரபு படியும், பழக்கவழக்கப்படியும் அர்த்தமண்டபத்திற்குள் திருக்கோயிலின் அர்ச்சகர், பரிசாரகர் மற்றும் மடாதிபதிகள் தவிர யாருமே அனுமதி கிடையாது. அதனால் நீங்கள் வெளியில் இருந்து தான் கடவுளை பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டதாக தகவல் வெளியானது.

அதன் பிறகு இளையராஜா பக்தர்களுடன் பக்தர்களாக வாசலில் நின்று சாமி தரிசனம் செய்திருக்கிறார். இந்த சூழலில் கோவிலில் அர்த்தமண்டபத்தில் இருந்து இளையராஜா வெளியேற்றப்பட்டதாக வெளியான தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. இது குறித்து சோசியல் மீடியாவில் பலரும் அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால் இளையராஜா இந்த சர்ச்சைக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவருடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதாவது என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளை பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும் எந்த இடங்களிலும் என்னுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல. விட்டுக் கொடுக்கவும் இல்லை, நடக்காத செய்தியை நடந்ததாக பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும் மக்களும் நம்ப வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.

Trending News