வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அவனா டா நீ! பலான கேசில் மாட்டிய விக்ரமன்.. நம்பவே முடியல ஊருக்கு தான் உபதேசமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருப்பவர்தான் விக்ரமன். அரசியல், பத்திரிக்கையாளர் போன்ற அடையாளத்துடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் இப்போது ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறார். ஆரம்பத்தில் அவ்வளவாக கவனிக்கப்படாமல் இருந்த விக்ரமன் தற்போது தன்னுடைய நடவடிக்கைகள் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

நிச்சயம் இவர் இந்த பிக் பாஸ் டைட்டிலை வெல்வார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் விக்ரமன் பற்றிய ஒரு அதிர்ச்சியான தகவல் கிடைத்துள்ளது. அதாவது கடந்த வருடம் ஒரு நபர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்ரமன் குறித்த ஒரு சர்ச்சையான கருத்தை வெளியிட்டு இருந்தார். அதாவது விக்ரமனை ஒரு பட வேலை சம்பந்தமாக சந்திக்க சென்ற போது அவர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக அவர் தெரிவித்து இருந்தார்.

Also read: தனலட்சுமியிடம் சிக்கிய அடுத்த பலி ஆடு.. குறும்படம் பார்க்காமலேயே ரெட் கார்ட் கொடுக்கப்போகும் ஆண்டவர்

அவர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், அந்த நேரத்தில் எதுவும் செய்ய முடியாமல் இருந்த என்னை பிறகு விக்ரமனின் நண்பர்கள் வந்து காப்பாற்றினார்கள் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். அதன் பிறகு விக்ரமன் தன்னிடம் இந்த விஷயத்தை யாரிடமும் கூற வேண்டாம் என்று கெஞ்சி கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு பலரும் விக்ரமன் பற்றி என்னிடம் கூறினார்கள். அவருக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும், அதனால் அவரை ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறினார்கள். இப்படி வெளியான சர்ச்சையான கருத்து தற்போது சோசியல் மீடியாவில் மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது.

Also read: வாடி போடி, நீ என்ன பெரிய இவளா குழாயடி சண்டையாக மாறிய பிக்பாஸ் வீடு.. தனலட்சுமி டார்கெட் செய்த அடுத்த நபர்

ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் விக்ரமன் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு வாரமும் அவர் நாமினேட் ஆகும் போது மக்களின் ஆதரவால் முதல் ஆளாக காப்பாற்றப்படுகிறார். அத்துடன் அதிக அளவு ஓட்டும் அவருக்கு தான் கிடைக்கிறது.

இதன் காரணமாகவே சில வேண்டாத நபர்கள் அவர் மீது பொய்யான குற்றச்சாட்டை பரப்புவதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவருக்கு கிடைக்கும் வாக்குகளை குறைப்பதற்காகவும் சிலர் இது போன்ற கட்டுக்கதைகளை திரித்து பரப்புவதாகவும் பேசப்பட்டு வருகிறது. தற்போது இந்த விவகாரம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also read: பிக் பாஸ் வீட்டில் சாக்கடையில் முங்கிய விக்ரமன்.. ஒரு மணி நேரத்தில் ட்ரெண்டான சம்பவம்

Trending News