புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பவானி ரெட்டியையே சுற்றி சுற்றிவரும் சினேக் பாபு.. பாத்ரூமில் கட்டிப்பிடி வைத்தியம் செய்த அடுத்த சினேகன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது தொடங்கப்பட்ட நாளில் இருந்தே விறுவிறுப்பு குறையாமல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளரான அபிஷேக் ராஜா பெரும் சர்ச்சையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்.

ஏனென்றால் சக போட்டியாளர்களிடம் மாற்றி மாற்றி பேசி அண்ணியனாகவும், அதேசமயம் பெண் போட்டியாளர்களை அடிக்கடி பாத்ரூமில் கட்டிப்பிடித்து ஆதரவும் அளித்து வருகிறார். இந்த சீசனில் ஆண்களை விட பெண்களே அதிகமாக உள்ளதால் அவர்களின் ஆதரவைப் பெறுவதற்காக இவ்வாறு செய்கிறா? என்ற குழப்பமும் ரசிகர்களுக்கு உண்டு.

அத்துடன் அபிஷேக் ராஜா பிரியங்காவுடன் சேர்ந்து மற்ற போட்டியாளர்களை கிண்டலடித்தும், பிறருடைய முடிவுகளை மாற்றும் அளவுக்கு இருவரும் சேர்ந்து மூளைச்சலவை செய்து வருகின்றனர்.

இதன் காரணமாகவே இவர்கள் இருவரையும் பிக் பாஸ்வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் வெறுக்க தொடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக அபிஷேக் ராஜாவின் அட்ராசிட்டி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

paavani-cinemapettai
paavani-cinemapettai

மேலும் இவர் சீரியல் நடிகை பவானி ரெட்டி, மதுமிதா போன்ற பெண் போட்டியாளரை சுற்றி சுற்றி வருகிறார் என்றும் சோஷியல் மீடியாவில் பிக்பாஸ் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் அபிஷேக் ராஜா பவானியிடம் அடிக்கடி சென்ற கடலை போட்டுக் கொண்டிருக்கிறார்.

இதேபோன்றுதான் பிக் பாஸ் சீசன்1-ல் கலந்துகொண்ட பாடலாசிரியர் சினேகன் சக போட்டியாளர்களை அடிக்கடி கட்டிப்பிடித்து பெரும் சர்ச்சையை கிளப்பினார். அதைப் போன்றுதான் அபிஷேக் ராஜா தற்போது செய்து வருவதாகவும் தெரிகிறது.

Trending News