ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2025

குக் வித் கோமாளி ஒரு எபிசோடுக்கு ரக்சன் வாங்கும் சம்பளம்.. கேட்டதுமே தல சுத்துதே

ரியாலிட்டி ஷோக்களில் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சின்னத்திரை ரசிகர்களிடையே தனி மவுசு. இந்நிகழ்ச்சி சமையலும், காமெடியும் கலந்த பக்கா என்டர்டைன்மென்ட் ஆன நிகழ்ச்சி என்பதால் 3 சீசனையும் தொடர்ந்து தொகுத்து வழங்கும் ரக்சன் இந்த நிகழ்ச்சியின் மூலம் ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டார்.

இவர் விஜய் டிவிக்கு வருவதற்கு முன்பே ராஜ் டிவி, கலைஞர் டிவி போன்ற பல்வேறு தனியார் தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கியவர். அதன்பிறகு விஜய் டிவியில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மேலும் மேலும் பிரபலமடைந்து கொண்டிருக்கிறார்.

இதனால் இந்த ஆண்டிற்கான விஜய் டெலிவிஷன் விருது வழங்கும் விழாவில் ரக்சனுக்கு சிறந்த தொகுப்பாளருக்கான விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. அதன்பிறகு தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரக்சனின் ஒரு எபிசோடில் சம்பளம் ஒரு லட்சம் என்பது சோஷியல் மீடியாவில் வைரலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ரக்சன், ஏற்கனவே ஜாக்லின் உடன் ‘கலக்கப்போவது யாரு’ என்ற காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ஹிட் கொடுத்தார். அதன் பிறகு இவருக்கு துல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

அந்தப் படத்துக்குப் பிறகு பெரிதாக வாய்ப்புகள் எதுவும் வராததால் மீண்டும் விஜய் டிவிக்கு வந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் குக்  மற்றும் கோமாளிகள் உடன் டைமிங், ரைமிங் காமெடிகளில் ரசிகர்களை கலகலப்பாக வைத்ததால் தற்சமயம் விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளராக மாறி உள்ளார்.

எனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிரிக்கவைக்கும் கோமாளிகளுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கும் நிலையில், ரக்சனும் மென்மேலும் வளர வேண்டும் என அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடுகின்றனர்.

Trending News