ரியாலிட்டி ஷோ பண்ணுவதில் எப்போதுமே கில்லாடி என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபித்து வருகிறது விஜய் டிவி. அந்த வகையில் சமீபத்தில் செம ஹிட்டான நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி.
தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் சினிமாவில் பிசியாகி வருகின்றனர். புகழ், சிவாங்கி, அஸ்வின் போன்ற பலரும் அடுத்தடுத்து தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி வருகின்றனர்.
மேலும் கடைசியாக நடந்துமுடிந்த குக் வித் கோமாளி சீசன்2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கனி என்பவர் டைட்டில் பட்டம் வென்றார். அவர் பிரபல இயக்குனர் திருவின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது.
திரு, விஷால் நடிப்பில் வெளிவந்த தீராத விளையாட்டுப் பிள்ளை, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களை இயக்கியவர். மேலும் பழைய இயக்குனர் அகத்தியனின் மருமகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்ற கனி சமீபத்தில் தன்னுடைய பெண் குழந்தைகளுடன் மொட்டை மாடியில் எடுத்த செல்பி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இவருக்கு இவ்வளவு பெரிய மகளா என ஆச்சரியப்படும் அளவிற்கு வளர்ந்து விட்டனர் அவரது இரு மகள்களும். இந்த புகைப்படம்தான் இன்றைய இணையதள ட்ரென்டிங்.