வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

குக் வித் கோமாளி 4 போட்டியாளர்கள் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம்.. வாயை பிளக்க வைத்த சிவாங்கி

Cook With Comali 4: விஜய் டிவி நிகழ்ச்சிகளில் ரசிகர்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்படும் ஒன்று குக் வித் கோமாளி. மூன்று சீசன்களை வெற்றிகரமாக கடந்து நான்காவது சீசனை முடித்து இருக்கிறது இந்த நிகழ்ச்சி. சமையல் போட்டியையே நகைச்சுவை கலந்த பாணியில் கொடுத்து பலரது பாராட்டுகளையும் பெற்ற இந்த நிகழ்ச்சி சினிமா பிரபலங்களாலும் கொண்டாடப்படுகிறது.

எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் ஒரு சில மாற்றங்கள் ஏற்பட்டது. மூன்று சீசன்களாக கோமாளியாக இருந்த சிவாங்கி, இந்த சீசனில் குக்காக மாறினார். அதேபோன்று மூன்று சீசன்களிலும் கோமாளியாக அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்துக் கொண்டிருந்த மணிமேகலை திடீரென்று நிகழ்ச்சியில் இருந்து விலகி பின்னர் தொகுப்பாளராக உள்ளே வந்தார்.

Also Read:மகளுடன் சேர்ந்து பாக்யா அடிக்கும் கூத்து.. இவ்வளவு மட்டமாவா உருட்டுவீங்க என தலையில் அடிக்கும் கோபி

இது பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் எரிச்சலை ஏற்படுத்துகிறது. கடந்த சீசன்களில் எந்த பாத்திரத்தில் சமைக்க வேண்டும் என்று கூட தெரியாத அளவிற்கு சமையலைப் பற்றி தெரியாதவராக காட்டிக் கொள்ளப்பட்ட சிவாங்கி திடீரென ஒவ்வொரு எபிசோடிலும் பெஸ்ட் குக் என பாராட்டப்பட்டதெல்லாம் இந்த நிகழ்ச்சிக்கு நெகட்டிவ் ஆக மாறியது. தற்போது இதில் பங்கேற்ற பிரபல போட்டியாளர்களின் சம்பள விவரம் வெளியாகி வைரலாகி கொண்டு இருக்கிறது.

பிரபல நடிகர் மைம் கோபி அவர்களுக்கு 40 முதல் 50 ஆயிரம் வரை ஒரு எபிசோடுக்கு சம்பளமாக கொடுக்கப்படுகிறது. மேலும் இவர் தான் இந்த போட்டியாளர்களில் அதிகமாக சம்பளம் வாங்குபவர். சிருஷ்டி மற்றும் ஆண்ட்ரியன் இருவருக்கும் தலா ஒரு எபிசோடுக்கு 30,000 சம்பளமாக கொடுக்கப்படுகிறது. ஷெரின் ஒரு எபிசோடுக்கு 35 ஆயிரம் சம்பளமாக வாங்கி இருக்கிறார்.

Also Read:வாயில ஈ போவது கூட தெரியாமல் அண்ணாந்து பார்த்து கோபி.. பொளந்து கட்டிய பாக்யா

நடிகை விசித்ரா ஒரு எபிசோடுக்கு 30000 சம்பளமாக பெற்றிருக்கிறார். ராஜ் ஐயப்பாவுக்கு 26 ஆயிரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பாக்கியலட்சுமி தொடரின் மூலம் பரிட்சயமான நடிகர் வி ஜே விஷாலுக்கு 25000 சம்பளமாக ஒரு எபிசோடுக்கு கொடுத்திருக்கிறார்கள். கோமாளியிலிருந்து குக்காக மாறி இருக்கும் சிவாங்கி ஒரு எபிசோடுக்கு 20 ஆயிரம் வரை சம்பளமாக பெற்றிருக்கிறார்.

இந்த சீசனின் இறுதி எபிசோடானது இன்று மற்றும் நாளை ஒளிபரப்பாக இருக்கிறது. குக் வித் கோமாளி நான்காவது சீசனின் டைட்டில் வின்னர் மைம் கோபி, இரண்டாவது இடம் சிஷ்டிக்கு கிடைத்திருக்கிறது. நடிகை விசித்ரா மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை தான் தெரியும்.

Also Read:குடும்பப் பிரச்சினையை வைத்து குளிர் காய நினைக்கும் விஜய் டிவி.. பிக் பாஸை நாரடிக்கப் போகும் 3 சர்ச்சையான ஜோடிகள்

Trending News