வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

குக் வித் கோமாளி சீசன் 4 இந்த வாரம் வெளியேறும் நபர்.. அப்ப வின்னர் உறுதியாக இவங்க தான்

சின்னத்திரை ரசிகர்களின்ஃபேவரிட் என்டர்டெயின்மென்ட் ஷோவான குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்படுவார்கள். அந்த வகையில் இந்த வாரம் வெளியேறப் போகும் நபர் யார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இந்த வார அடிப்படையில் சிவாங்கி மற்றும் விஜே விஷால் இருவரும் தான் டேஞ்சர் ஜோனில் இருந்த நிலையில், யார் வெளியேறப் போகிறார் என்ற பரபரப்பான சூழ்நிலை நிலவியது. கடைசியில் யாரும் எதிர்பாராத அதிரடி ட்விஸ்ட் ஏற்பட்டது. இதில் பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இளசுகளின் மனதைக் கவர்ந்த விஜே விஷாலுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

Also Read: 10 பட வாய்ப்பை வேண்டாம் என உதறிய சூரி.. அஸ்வினை போல் வாயை விட்டு மாட்டிக்கிட்டியே பங்கு

இந்த நிலைகள் விஜே விஷால் தான் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே சிவாங்கி தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர் என தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்ற நிலையில், அது இப்போது உறுதியாகிவிட்டது.

அதுமட்டுமல்ல இந்த சீசனில் தொடர்ந்து ஆண் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருப்பதால், இன்னும் மைம் கோபி மட்டுமே மிச்சம் இருப்பார். இவராவது பைனல் வரை இருக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் விரும்புகின்றனர்.

Also Read: ஊத்தி மூடப் போகும் குக் வித் கோமாளி சீசன் 4.. அதிரடியாக வெளியேறிய பிரபலம்

மேலும் சிவாங்கி இருந்தால் தான் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சிக்கும் கன்டென்ட் கிடைக்கும் என்பதால், அவரை அவ்வளவு சீக்கிரம் விஜய் டிவி வெளியேற்ற மாட்டார்கள். அதனால் தான் விஜே விஷாலை வெளியேற்றிவிட்டு சிவாங்கியை சேவ் செய்துவிட்டனர் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஏற்கனவே சிவாங்கி கடந்த மூன்று சீசன்களிலும் கோமாளியாக இருந்து, இந்த முறை குக்காக களம் இறங்கி உள்ளார்.

மேலும் இந்த வாரம் கோமாளிகள் அனைவரும் குக்குகள் போன்றே வேடமிட்டு வந்திருப்பதால் நிகழ்ச்சி மேலும் கலைக்கட்டி உள்ளது. அதிலும் புகழ், போட்டியாளர் ஷெரின் போன்றும், குரேஷி போட்டியாளர் சிருஷ்டி டாங்கே போன்றும் வேஷமிட்டு ஓவர் அலப்பறை செய்து கொண்டிருக்கின்றனர்.

Also Read: விஷாலால் திருமணத்தை வெறுத்த வரலட்சுமி.. விஜய் டிவி பிரபலம் மீது வந்த திடீர் காதல்

Trending News