செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சிவாங்கியை ஆசை காட்டி மோசம் செய்த விஜய் டிவி.. குக் வித் கோமாளி சீசன் 4 டைட்டில் வின்னர் இவர்தான்

Cook With Comali 4: விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சி ஆன குக் வித் கோமாளி சீசன் 4 நேற்று நிறைவு பகுதியை எட்டி இருந்தது. குக் மற்றும் கோமாளி இருவரும் சேர்ந்து கலாட்டாவாக சமையல் செய்யும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. புதுமை வாய்ந்த இந்த நிகழ்ச்சி முதல் சீசனில் இருந்து ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது.

குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்றிருந்தார். இரண்டாம் சீசனில் காரக்குழம்பு கனி மற்றும் மூன்றாவது சீசனில் ஸ்ருதிகா டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்றனர். இந்நிலையில் நேற்று நடந்த சீசன் 4 நிகழ்ச்சியில் இறுதி கட்டத்தில் சிவாங்கி, விசித்ரா, மைம் கோபி, ஸ்ருஷ்டி, கிரண் மற்றும் ஆண்ட்ரியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Also Read : விஜய்க்கு ஜால்ரா தட்டிய வனிதா.. ஒட்டு மொத்த சர்ச்சைக்கும் அவங்க ஸ்டைலிலே கொடுத்த பதில்

கடந்த மூன்று சீசன்களாக சிவாங்கி கோமாளியாக இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்ற நிலையில் முதல் முறையாக இந்த சீசனில் குக்காக பங்கு பெற்றார். மேலும் சிவாங்கி பைனல் வரை சென்றதால் விஜய் டிவி வேண்டும் என்று அவரை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளதாக விமர்சனங்களும் எழுந்தது. இந்நிலையில் நேற்று நடந்த ஃபைனலில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது.

அதன்படி குக் வித் கோமாளி சீசன் 4 இல் மூன்றாவது இடத்தை நடிகை விசித்ரா பெற்றிருக்கிறார். இவருக்கு முன்னதாக இரண்டாவது இடம் நடிகை ஸ்ருஷ்டிக்கு கிடைத்திருக்கிறது. மேலும் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே குக் வித் கோமாளி சீசன் 4 டைட்டில் வின்னர் பட்டத்தை மைம் கோபி பெற்றிருக்கிறார்.

Also Read : குடும்பப் பிரச்சினையை வைத்து குளிர் காய நினைக்கும் விஜய் டிவி.. பிக் பாஸை நாரடிக்கப் போகும் 3 சர்ச்சையான ஜோடிகள்

இவருக்கு கிட்டத்தட்ட 10 லட்சம் பரிசுத்தொகை மற்றும் குக் வித் கோமாளி சீசன் 4 டைட்டில் வின்னர் காண கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் குக் வித் கோமாளி கடந்த சீசன்களில் முதல் ஆண் டைட்டில் வின்னர் என்ற சாதனையை மைம் கோபி படைத்துள்ளார்.

இந்நிலையில் சிவாங்கி முதல் மூன்று இடங்களில் எதிலுமே வராதது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் டிவி ஆசை காட்டி மோசம் செய்தாக சிலர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். மேலும் அடுத்த வாரம் முதல் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பதிலாக வேறு ஒரு புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.

Also Read : மீனாட்சி கிட்டயே டக்கால்டி வேலையை காட்டுற குணசேகரன்.. ஜீவானந்தத்தின் கேரக்டரை சொதப்பிய எதிர்நீச்சல்

Trending News