ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

CWC 5: பிரியங்காவுக்காக சொம்படிக்கும் விஜய் டிவி.. CWC5-ல் இருந்து விலகிய முக்கிய கோமாளி

CWC 5: விஜய் டிவிக்கும், சன் டிவிக்கும் தான் சண்டை என இவ்வளவு நாளும் நாமும் நினைத்து கொண்டு இருந்தோம். கடைசில பார்த்தா விஜய் டிவிக்குள்ளயே ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்து கொண்டிருக்கிறது. சேனலை பொறுத்த வரைக்கும் அவர்களுக்கு டிஆர்பி தான் முக்கியம்.

விஜய் டிவி இப்போது எப்படியாவது குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியை வெற்றி நிகழ்ச்சியாக மாற்றி விட வேண்டும் என்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக என்னவெல்லாம் குட்டி கரணம் அடிக்க முடியுமோ அதை எல்லாம் செய்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதற்காக அந்த நிகழ்ச்சியில் யாரையெல்லாம் கொண்டு வந்தால் அன்றைய எபிசோடு தூள் பறக்கும் என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். கோமாளிகள் இருந்து, குக்குகள் வரை முதலில் ஒப்பந்தம் செய்யும்போது நீங்கள் நிகழ்ச்சி முழுக்க வருவீர்கள் என்று சொல்லித்தான் பேசி இருக்கிறார்கள்.

ஆனால் எபிசோடு போக போக மக்கள் யார் மீது அதிக கவனம் செலுத்தவில்லையோ அவர்களை எல்லாம் தட்டிக் கழிப்பது போல் நடந்து கொள்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் விஜய் டிவி வளர்த்து விட்ட செல்லப் பிள்ளைகளுக்கு எப்போதுமே அவர்கள் நடத்தும் ரியாலிட்டி ஷோக்கலிள் அதிக மரியாதை உண்டு.

அதுதான் இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் நடந்து வருகிறது. பிரியங்கா ஒரு நிகழ்ச்சியில் இருக்கிறார் என்றால் அவரைத் தாண்டி மற்றவர்கள் மீது கண் போவது என்பதெல்லாம் நடக்கவே நடக்காத காரியம். இந்த நிகழ்ச்சியிலும் அவருக்கு ஓவர் சலுகை கொடுக்கப்படுகிறது.

சேனல் உள்ளேயே நடக்கும் உட்கட்சி பூசல்

அவர் மட்டுமல்லாமல் யாருக்கெல்லாம் மக்களிடையே அதிக செல்வாக்கு இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் தனிப்பட்ட சலுகை கொடுக்கப்படுகிறது. இதனால்தான் தற்போது கலக்கப்போவது யாரு புகழ் நாஞ்சில் விஜயன் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்திருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் டிஆர்பிஐ ஏற்றுவதற்காக பழைய போட்டியாளர்களை அடிக்கடி உள்ளே கொண்டு வருகிறார்கள். இதனால் புது குக்குகளுக்கு பெரிய அளவில் ரீச் கிடைப்பதில் பிரச்சனை இருக்கிறது. எனவே இந்த சீசனை பொருத்தவரைக்கும் உள்ளே இருக்கும் நிறைய பேருக்கு மனஸ்தாபம் அதிகமாக இருக்கிறதாம்.

நாஞ்சில் விஜயனை தொடர்ந்து நிறைய பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற வாய்ப்பு இருப்பதாக உள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Trending News