விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மூலம் போட்டியாளராக களமிறங்கி, அதன்பின் பலகோடி ரசிகர்களை கொண்ட குக் வித் கோமாளி என்ற ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானவர் தான் சிவாங்கி.
இவருடைய துறுதுறு பேசினாலும், எதார்த்தமான சுபாவத்தினாளும் எக்கச்சக்கமான ரசிகர்களை தன் வசப்படுத்தினார். இந்நிலையில் சிவாங்கியின் பள்ளிப்பருவ புகைப்படம் ஆனது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதில் சிவாங்கி தன்னுடைய தோழிகளுடன், ‘நாங்கெல்லாம் அப்பவே அப்படி’ என்று கெத்து காட்டும் அளவுக்கு போஸ் கொடுத்துள்ளார். மேலும் தற்போது சிவாங்கிக்கு 20 வயசு என்று சொன்னால் யாரும் நம்ப முடியாது,
ஏனென்றால் அந்த அளவிற்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வேற லெவலில் தனது அட்ராசிட்டி அரங்கேற்றிக் கொண்டிருக்கும் சிவாங்கி, ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பதற்காகவே சிறு பிள்ளை போல் ரகளை செய்து வருகிறார்.
மேலும் சிவாங்கி, விஜய் டிவியின் மூலம் படிப்படியாக உயர்ந்து, தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்றுள்ளார். ஏனென்றால் சமீபத்தில் சிவகார்த்திகேயன் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சென்ற போது கண்டிப்பாக என்னுடைய அடுத்தப் படத்தில் இதிலிருந்து ஒருவருக்கு வாய்ப்பு கொடுப்பேன் என கூறியதன் அடிப்படையில்,
தற்போது சிவாங்கிக்கு, சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கும் டான் படத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து இவருக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வருவதற்கும் அதிக வாய்ப்பிருக்கிறது.