வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

குக் வித் கோமாளிக்கு வைத்த சூனியம்.. மணிமேகலை யாருன்னு காட்டிய தருணம், அடங்கிப் போன பிரியங்கா

Vijay Tv Manimegalai and Priyanka: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளிலே மக்களின் ஃபேவரட் நிகழ்ச்சி எது என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். அதனால்தான் தொடர்ந்து நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்து தற்போது ஐந்தாவது சீசன் முடியும் தருவாயில் இருக்கிறது. ஆனால் இந்த சீசன் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக இல்லாமல், பார்க்கவே கடுப்பாக இருக்கிறது என்று எரிச்சல் படும் அளவிற்கு தான் அமைந்திருக்கிறது.

அதற்கு காரணம் பிரியங்கா செய்த அடாவடித்தனம் தான் என்று பலரும் கமெண்ட் பன்னிய நிலையில் தற்போது அங்கு இருப்பவர்களுக்கும் பிரியங்கா செய்த செயல்களால் மிகப்பெரிய மன வேதனை ஏற்பட்டு இருக்கிறது. ஆனாலும் பலரும் பிரியங்காவை சகித்துக் கொண்டு எதிர்த்து பேச முடியாமல் அடங்கி போன நிலையில் மணிமேகலை தன்மானமா வருமானமா என்று ஒரு கேள்விக்குறி வரும்பொழுது எனக்கு தன்மானம் தான் முக்கியம் என்று அனைத்தையும் தூங்கி எறிந்து விட்டு போயிருக்கிறார்.

பிரியங்கா ஆடிய ஆட்டத்திற்கு மணிமேகலை வைத்த ஆப்பு

அதாவது மணிமேகலைக்கு ரொம்பவும் பிடித்த ஒரு விஷயம் எதுவென்றால் அது ஆங்கரின் தான். அதனால் தான் இந்த ஒரு தருணத்திற்காக பல வருடங்களாக போராடி வந்தார். ஆனாலும் செய்தால் இதை மட்டும் தான் செய்வேன் என்று பிடிவாதமாக இல்லாமல் கடந்த நான்கு சீசன்களிலும் கோமாளியாக மக்களை என்டர்டைன்மென்ட் பண்ணி ரசிகர்களை சம்பாதிக்கும் அளவிற்கு இவருக்கான இடத்தை தக்க வைத்தார்.

அந்த வகையில் இந்த சீசனில் தொகுத்து வழங்கும் பொறுப்பை ஏற்று அதையும் சரிவர செய்து மக்களிடம் பாராட்டை பெற வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அதையெல்லாம் தவிடு பொடியாக்கும் விதமாக பிரியங்காவின் செயல்கள் இருந்திருக்கிறது. அதாவது விஜய் டிவி பொருத்தவரை நாம் தான் முதலிடத்தில் இருக்க வேண்டும்.

யாரையும் வளர விடக்கூடாது, எங்கே மணிமேகலை இந்த நிகழ்ச்சியை நன்றாக செய்துவிட்டால் அடுத்தடுத்த விஜய் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பொறுப்பு கிடைத்து விடுமோ என்று பிரியங்காவிற்கு பயம் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் அவ்வப்போது மணிமேகலையை மட்டம் தட்டி பேசும் விதமாகவும், அவருடைய தொகுப்பாளனி வேலையை தலையிட்டு அதில் கருத்து சொல்லும் விதமாகவும் பிரியங்கா தொடர்ந்து பல சில்ற வேலைகளை பார்த்து வந்திருக்கிறார்.

இதையெல்லாம் பார்த்து மணிமேகலை கொந்தளித்த நிலையில் பலமுறை ஓப்பனாக பேசி இருக்கிறார். ஆனாலும் பிரியங்காவுக்கு விஜய் டிவி கொடுத்த முழு ஆதரவால் நிகழ்ச்சி நடக்கும் பொழுது அனைவரின் முன்னிலையிலும் மணிமேகலையை மரியாதை இல்லாமல் பேசி அவமானப்படுத்தி இருக்கிறார். அப்பொழுது இருவருக்கும் வாக்குவாதம் நடந்த பொழுதும் மணிமேகலை எந்த ஒரு தருணத்திலும் பிரியங்காவை ஒருமையில் பேசி திட்டவே இல்லை.

ஆனால் அதற்கு எதிர் மாறாக பிரியங்காவின் வாக்குவாதம் மணிமேகலை காயப்படுத்தும் அளவிற்கு இருந்திருக்கிறது. இதை விஜய் டிவி சேனல் தட்டி கேட்காத நிலையில் மணிமேகலை இந்த இடத்தில் இனியும் இருந்தால் எனக்கு அவமானம் என்பதற்கு ஏற்ப வேலையை வேண்டாம் என்று துணிந்து போய்விட்டார். ஏற்கனவே குக் வித் கோமாளி சீசன் 5 முன்னாடி மாதிரி இல்லை என்று மக்கள் புலம்பி வந்த நிலையில் தற்போது மணிமேகலைக்கு ஏற்பட்ட அவமானத்தால் அனைவரும் இந்த சீசனை மொத்தமாக வெறுத்து விட்டார்கள்.

இப்படித்தான் கடந்த பிக்பாஸ் சீசன் பிரதீப்புக்கு அநியாயமாக கொடுத்த ரெட் கார்டு மூலமாக அனைவரும் நியாயம் கேட்டு போராடினார்கள். அதே மாதிரி இப்பொழுது குக் வித் கோமாளி சீசனில் மணிமேகலைக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு நியாயம் கேட்கும் விதமாக பலரும் போர்கொடி தூக்கி ஆதரவு கொடுத்து வருகிறார்கள். தற்போது பிரியங்காவிற்கு, மணிமேகலை எந்த இடத்தில் இருக்கிறார் நாம் எங்கே இருக்கிறோம் என்ற ஒரு விஷயம் ரசிகர்கள் மூலம் புரிந்து இருக்கும்.

ஏனென்றால் பிரபலங்கள் மட்டுமில்லாமல் குக் வித்து கோமாளி சீசனை பார்த்த மக்களும் மணிமேகலைக்கு ஆதரவு கொடுத்து பிரியங்காவை திட்டி தீர்த்து மன்னிப்பு கேட்க சொல்லி வருகிறார்கள். ஏற்கனவே குக் வித் கோமாளிக்கு சூனியம் வைத்தது போல் வெங்கட் பட் இல்லாமல் அடி வாங்கிவிட்டது. இப்பொழுது பிரியங்காவின் அளப்பறையால் மொத்தமாக சோழி முடிந்து விட்டது.

Trending News