செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

குக் வித் கோமாளி தர்ஷாவிற்கு திருமணம் ஆயிடுச்சா? அதுவும் தல அஜித்தின் நெருங்கிய சொந்தம்..

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘செந்தூர பூக்களே’ நாடகத்தின் வில்லியாக நடித்து பிரபலமாகி கொண்டிருப்பவர் தான் தர்ஷா குப்தா. இந்த சீரியலை தொடர்ந்து குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியிலும்,

ரொம்பவே கிளாமராக கலக்கிக் கொண்டிருக்கும் தர்ஷா குப்தாவிற்கு எக்கச்சக்கமான ரசிகர் பட்டாளம் கிடைத்துள்ளது. இவ்வாறு சின்னத்திரையில் பிரபலமான தர்ஷா குப்தா, தற்போது வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

தற்போது தர்ஷா பதிவிட்டு இருக்கும் புகைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஏனென்றால்  தற்போது தல அஜித்தின் மனைவியான ஷாலினியின் தம்பியான நடிகர் ரிச்சர்ட் ரிஷி உடன் சேர்ந்து ருத்ரதாண்டவம் என்ற படத்தில் தர்ஷா குப்தா அறிமுகமாக உள்ளார்.

இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு புகைப்படங்களை தர்ஷா, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக இந்த போட்டோக்களில் தர்ஷா கல்யாணமாகி கர்ப்பமாக இருக்கும் படி காட்சியளிக்கிறார்.

dharsha-cinemapettai

மேலும் அதில் ரிச்சர்ட் ரிஷியின் மனைவியாகவே தத்ரூபமாக தெரிவது ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஆகையால் அதனை தீர்ப்பதற்காகவே தர்ஷா, இந்த புகைப்படத்துடன் படத்தின் டைட்டில் ஆன ‘ருத்ரதாண்டவம் ஆரம்பம்’ என்பதையும் பதிவிட்டுள்ளார்.

Trending News