வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

5 பேர் செஞ்ச கிரிமினல் வேலை.. பிரதீப் விஷயத்தில் நடந்த உண்மையை சொன்ன கூல் சுரேஷ்

BB7 Tamil: விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 80 நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் கூட பிரதீப் ஆண்டனி அலை ஓய்ந்த பாடு இல்லை. பிக் பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் ஆகி வெளியே வரும் ஒவ்வொரு போட்டியாளரிடமும் முதலில் கேட்கும் கேள்வி பிரதீப்பை பற்றி தான் இருக்கிறது. அந்த வகையில் இப்போது சிக்கி இருப்பவர் தான் கூல் சுரேஷ்.

கூல் சுரேஷ் பொறுத்த வரைக்கும் வாயை திறந்தாலே பட்டாசு போல் வார்த்தைகளை சரவெடியாக வெடிப்பார். இவர் எப்போது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார், பிரதீப்பை பற்றி உண்மையை சொல்வார் என நிறைய பேர் எதிர்பார்த்தார்கள். இருந்தாலும் இவ்வளவு சீக்கிரம் வெளியேறி விடுவார் என்றும் நினைக்கவில்லை. அப்படி வெளியில் வந்த இவரிடம் இந்த பிக் பாஸ் டைட்டில் வின் பண்ணுவதற்கு யாருக்கு அதிக தகுதி இருக்கிறது என்ற ஒரு கேள்வியை கேட்டு கொளுத்தி போட்டு இருக்கிறார்கள்.

Also Read:கமலுக்கு ஒரு குத்து, மாயாவுக்கு ஒரு குத்து.. யாரு சாமி இவரு.? பொளந்து கட்டும் டைட்டில் வின்னர் அப்பா

இந்த கேள்விக்கு பதில் சொன்ன கூல் சுரேஷ் டைட்டில் வின் பண்ணுவதற்கு தகுதியான ஒரே ஆள் பிரதீப் ஆண்டனி தான் என்று சொல்லி இருக்கிறார். ஒருவேளை பிரதீப் ஆண்டனி உள்ளே இருந்து நான் அல்லது பிரதீப் டைட்டிலை வாங்க வேண்டிய நிலைமை வந்திருந்தால், நானே அதை விட்டுக் கொடுத்து தயவுசெய்து அந்த டைட்டிலை பிரதீப்புக்கு கொடுத்து விடுங்கள் என்று சொல்லி இருப்பேன்.

கூல் சுரேஷ் பேட்டி

இந்த விளையாட்டை உண்மையாகவும், ஒரு வெறியுடனும் விளையாடியது பிரதீப் மட்டும் தான். அவன் வெளியே செல்வான் என நான் எதிர்பார்க்கவில்லை. ஒரு ஐந்து பேர் சேர்ந்து செய்த கிரிமினல் வேலைதான் அவனுக்கு ரெட் கார்டு கொடுத்தது. அதனால் தான் நான் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டாம், அவன் உள்ளே இருக்கட்டும் என்று சொன்னேன்.

பிக் பாஸ் வீட்டில் இப்போதைக்கு உண்மையாக இருப்பவர்கள் என்றால் விஷ்ணு, தினேஷ், மணி மட்டும் தான். அர்ச்சனா, விசித்ரா, தினேஷ், மணி, விஷ்ணு ஐந்து பேருக்கு தான் பிக் பாஸ் சீசன் 7 டைட்டிலை வின் பண்ணும் தகுதி இருக்கிறது. இதில் அந்த டைட்டில் யாருக்கு கிடைக்கிறது என்பது அதிர்ஷ்டத்தை பொருத்த தான் அமையும் என கூல் சுரேஷ் சொல்லி இருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டில் கூல் சுரேஷ் மற்றும் பிரதீப் ஆண்டனிக்கு இடையே நடந்த பிரச்சனையில் தான், பிரதீப்புக்கு எதிராக உரிமை குரலை எழுப்பினார்கள். கடைசியில் ஏதேதோ சொல்லி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லி முடித்து விட்டார்கள். பிரச்சனைக்கு காரணமான கூல் சுரேஷ் இப்படி சொல்லி இருப்பது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

Also Read:சாத்தான் வேதம் ஓதுதா.? தில்லுமுல்லு செஞ்சி கப்பு வாங்கிட்டு ஓவர் ரவுசு விடும் பிக்பாஸ் வின்னர்

Trending News