வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நா துரோகியா, வாய் கூசாம பேசாதீங்க.. கதறி அழுது வீடியோ வெளியிட்ட கூல் சுரேஷ்

சிம்பு நடித்த ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றி நடைபோட்டு கொண்டிருக்கிறது. இந்த படத்திற்காக கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக ப்ரமோஷன் கொடுத்து வந்த நடிகர் கூல் சுரேஷ் இப்போது ஒரு வீடீயோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வெந்து தணிந்தது காடு படத்தை தமிழகமெங்கும் ரீச் செய்தது கூல் சுரேஷ் தான். இந்த வருடம் முழுவதும் ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும் போதும் அந்த படத்தின் FDFS க்கு சென்று அந்த படத்தை பற்றி ரிவியூ சொல்லிவிட்டு, அதோடு சேர்த்து வெந்து தணிந்தது காடு படத்திற்கான ப்ரமோஷனையும் முடித்து விடுவார்.

Also Read: ஒரே போடாய் உண்மையை போட்டுடைத்த கூல் சுரேஷ்.. நண்பனுக்கு உதவாத சிம்பு

இப்படி கூல் சுரேஷின் கனவு படமாகவே மாறிப்போன VTK வின், FDFS க்காக ரோகிணி தியேட்டருக்கு கூல் சென்றிருந்த போது ரசிகர்கள் அவரை காண முண்டியடித்து கொண்டனர். இதில் அவர் வந்த ஆடி காரின் கண்ணாடி உடைந்து விட்டது. இந்த சம்பவத்தை ட்ரோல் செய்தும், சுரேஷுக்கு எதிராகவும் பல கருத்துக்கள் வெளியாகின.

இதை பற்றி பேசிய கூல் சுரேஷ், தான் 25 வருடங்களாக திரையுலகில் ஒரு பேருக்கும், புகழுக்கும் ஏங்கி கொண்டிருப்பதாகவும், இது போன்ற ரிவியூக்கள் கொடுப்பதால் எந்த வருமானமும் கிடைப்பதில்லை என்றும் இன்று வரை வண்டி டியூ, வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தவித்து கொண்டிருப்பதாகவும், என்னை துரோகி போல் பார்த்து எனக்கு எதிராக நெகட்டிவ் விமர்சனங்கள் கொடுக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

Also Read: காசுக்காக மணி ஆட்டும் கூல் சுரேஷ்.. நாட்டாமை என்று நினைத்து செய்யும் கேவலமான வேலை

மேலும் அழுது கொண்டே பேசிய அவர் தான் ரிவியூ கொடுப்பது பிடிக்கவில்லை என்றால் நிறுத்தி கொள்வதாகவும், என்ன ஆனாலும் சிம்புக்கு சப்போர்ட் செய்வதை நிறுத்த மாட்டேன் எனவும், சினிமாவே இல்லையென்றாலும் என்னுடைய நண்பன் சந்தானம் பார்த்து கொள்வார் என்றும் கூறியுள்ளார்.

மேலும் பேசிய கூல் சுரேஷ் , கார் கண்ணாடிக்கான இழப்பீடை ஐசரி கணேஷ் தர வேண்டும் என்ற கமெண்டுகளை அவர் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும், தன்னை எவ்வளவு ட்ரோல் செய்தாலும் வெந்து தணிந்தது காடு, பார்ட் டூக்கு வணக்கத்தை போடு என்று சொல்லிக் கொண்டு தான் இருப்பேன் என்றும் சொல்லியிருக்கிறார்.

Also Read: ஜி பி முத்து தொடர்ந்து பிக்பாஸில் வர இருக்கும் யூடியூப் பிரபலம்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் உலகநாயகன்

Trending News