ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

கவுண்டமணி வில்லனாக மிரட்டிய 9 படங்கள்.. சூப்பர் ஹிட்டான பக்கா லிஸ்ட்!

நகைச்சுவை நடிகராக பிரபலமான கவுண்டமணி சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். கதாநாயகர்களுக்கு இணையான ரசிகர் பட்டாளம் இவருக்கும் உண்டு. கவுண்டமணியின் கவுண்டர்கள் மக்கள் ரசிக்கும் படி இருக்கும். நகைச்சுவை நடிகர் என்ற அடையாளத்துடன் உள்ள கவுண்டமணி சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.

முள் இல்லாத ரோஜா: ராமராஜ் இயக்கிய 1982-ல் வெளியான திரைப்படம் முள் இல்லாத ரோஜா. இப்படத்தில் சக்கரவர்த்தி, விஜயகலா முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு முரளிராஜ் இசையமைத்திருந்தார். இப்படத்தில் கவுண்டமணி முக்கிய கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

goundamani
goundamani

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்: வி சேகர் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்.கவுண்டமணி, பானுப்பிரியா, செந்தில், சின்னி ஜெயந்த், மனோரமா, சந்திரசேகர், கோவை சரளா, சார்லி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு சந்திரபோஸ் இசை அமைத்திருந்தார். இப்படத்தில் கவுண்டமணி தர்மலிங்கம் கதாபாத்திரத்திலும் அவர் மனைவியாக மனோரமா நடித்திருந்தார்.

எங்க ஊரு ராசாத்தி: எம் எஸ் ராஜேந்திரன் இயக்கத்தில் 1980ல் வெளிவந்த திரைப்படம் எங்க ஊரு ராசாத்தி. இப்படத்திற்கு கங்கைஅமரன் இசையமைத்திருந்தார். இப்படத்தில் சுதாகர், ராதிகா மற்றும் பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தில் கவுண்டமணி வில்லனாக நடித்திருந்தார்.

பாட்டுக்கு நான் அடிமை: சண்முகப் பிரியன் இயக்கத்தில் 1990ல் வெளியான திரைப்படம் பாட்டுக்கு நான் அடிமை. இப்படத்தில் ராமராஜன், ரேகா, குஷ்பூ, டிஸ்கோ சாந்தி ,கவுண்டமணி, ஆனந்தராஜ், ரேகா ஆகிய நடித்திருந்தனர். இப்படத்தின் இசை இசைஞானி இளையராஜா. இப்படத்தில் கவுண்டமணி ராமராஜனின் மாமாவாக காமெடி கலந்த வில்லனாக நடித்திருந்தார்.

ராஜாத்தி ரோஜாக்கிளி: சுரேஷ் நடிப்பில் உருவான திரைப்படம் ராஜாத்தி ரோஜாக்கிளி. இப்படத்தில் நளினி, ராஜேஷ் மற்றும் செந்தில் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். காமெடி கதாபாத்திரத்தில் மட்டும் நடித்து வந்த கவுண்டமணி இப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார். வாழ பழுத்திருக்கு என்ற பாடலில் கவுண்டமணியுடன் அனுராதா ஒரு கவர்ச்சி குத்தாட்ட பாடலில் ஆடியுள்ளார்.

ஞானப்பழம்: பாக்யராஜ் நடிப்பில் உருவான திரைப்படம் ஞானப்பழம். இப்படத்தில் சுகன்யா, வினிதா மற்றும் ரேகா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் சுகன்யாவிற்கு அண்ணனாக கவுண்டமணி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

16 வயதினிலே: கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் 16 வயதினிலே. இப்படத்தில் ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் மற்றும் கவுண்டமணி நடித்துள்ளனர். இப்படத்தில் ரஜினிகாந்த் வில்லன் கதாபாத்திரம் நடித்திருந்தது அனைவருக்கும் தெரியும். ஆனால் கவுண்டமணியும் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரஜினியுடன் சேர்ந்து கவுண்டமணியின் வில்லத்தனமான நடிப்பு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

பொன்மன செல்வன்: விஜயகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் பொன்மனசெல்வன். இப்படத்தில் ஷோபனா மற்றும் வித்யா ஸ்ரீ போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கவுண்டமணி வில்லனாக நடித்துள்ளார். விஜயகாந்துடன் கவுண்டமணி வில்லனாக நடித்த முதல் திரைப்படம் இதுதான். இப்படத்தில் கவுண்டமணி வில்லத்தனமான நடிப்பு ரசிகர்களிடம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது.

ரகசிய போலீஸ்: சரத்குமார் நடிப்பில் உருவான திரைப்படம் ரகசிய போலீஸ். இப்படத்தில் நகுமா, ராதிகா மற்றும் செந்தில் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதில் சரத்குமாருக்கு வில்லனாக கவுண்டமணி நடித்துள்ளார். இப்படத்தில் கவுண்டமணியின் வில்லத்தனமான நடிப்பு ரசிகர்களிடம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது.

அந்தப் படங்களைத் தவிர பேர் சொல்லும் பிள்ளை, ஆவாரம் பூ போன்ற படங்களிலும் கவுண்டமணி வில்லனாக நடித்துள்ளார்.

Trending News