Parthiban: பார்த்திபன் ஒரு படம் எடுக்கிறார் என்றாலே ஏதாவது ஒரு பஞ்சாயத்து இருக்கும். இரவின் நிழல், ஒத்த செருப்பு என ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சர்ச்சையை கிளப்பியது. அந்த லிஸ்டில் தற்போது வெளிவர இருக்கும் டீன்ஸ் படமும் இணைந்துள்ளது.
பார்த்திபன் இயக்கியுள்ள இப்படம் குழந்தைகளை மையப்படுத்திய த்ரில்லர் கதையாக எடுக்கப்பட்டுள்ளது. வரும் 12ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. அன்றுதான் கமல் சங்கர் கூட்டணியின் இந்தியன் 2 ரிலீஸ் ஆகிறது.
மிகப்பெரும் பட்ஜெட்டில் ஏழு வருட காத்திருப்பின் பலனாக வெளிவரும் இப்படத்துடன் பார்த்திபன் மோதுவது பெரும் ஆச்சரியம் தான். அதை அடுத்து படத்தின் கிராபிக்ஸ் பணிகளுக்கான மீதி தொகை 51 லட்சத்தை கொடுக்காததால் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என சிவ பிரசாத் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
கமலுடன் மோதும் பார்த்திபன்
முன்னதாக பார்த்திபன், பேசிய தொகையை விட சிவ பிரசாத் அதிக பணம் கேட்கிறார். மேலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிகளை முடித்துக் கொடுக்கவில்லை எனவும் புகார் அளித்திருந்தார்.
இதற்கு சிவப்பிரசாத் தரப்பில் விளக்கமும் கொடுக்கப்பட்டது. அதை அடுத்து இந்த வழக்கின் விசாரணை நேற்று சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன் ஜூலை 18-ஆம் தேதிக்குள் இது தொடர்பான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இதனால் படம் வெளிவருமா என்ற ஒரு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பார்த்திபன் என்னுடைய படத்திற்கு நானே வரிவிலக்கு அளிக்கிறேன். டீன்ஸ் படத்தின் டிக்கெட் விலை 100 ரூபாய் மட்டுமே என அறிவித்து பரபரப்பை கிளப்பி இருந்தார்.
இந்நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தடைகள் அனைத்தையும் தாண்டி கமலுடன் பார்த்திபன் மோதுவாரா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.
பார்த்திபன் படத்திற்கு வரும் சிக்கல்கள்
- இந்தியன்-2 வசூலை முறியடிக்க பார்த்திபன் போட்ட பல திட்டம்
- சீதாவுடனான விவாகரத்து, 20 வருஷத்துக்கு பிறகு காரணத்தை சொன்ன பார்த்திபன்
- சுத்துன ரீல் எல்லாம் அந்து போச்சு