தமிழ் சினிமாவில் பின்புலத்துடன் அறிமுகமானாலும், தன்னுடைய கடின உழைப்பினால் முன்னேறி தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் தான் சூர்யா. இவருக்கு இன்று தமிழகத்தில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
மேலும் கடந்த 6 ஆண்டுகளாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத சூர்யா, சூரரை போற்று திரைப்படத்தின் மூலம் அதை நிறைவேற்றிக் காட்டினார். ஏனென்றால் சூர்யா அந்த அளவிற்கு சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்திருப்பார்.
மேலும் சூரரை போற்று திரைப்படம் வெளியாகி இத்தனை நாட்களாகியும் இந்த படத்தைப் பற்றிய பேச்சு இன்றுவரை குறையாமல் தான் உள்ளது. இந்த நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் சூர்யாவை புகழ்ந்து தள்ளி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதாவது சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் ஹிட்டடித்தது. அதுமட்டுமில்லாமல் படத்தைப் பார்த்த ஒவ்வொருவரும் சூர்யாவையும், பட குழுவினரையும் புகழ்ந்து தள்ளினர்.
அந்தவகையில் இந்திய கிரிக்கெட் வீரரான ரஹானே, சூரரைப்போற்று திரைப்படத்தை பார்த்துவிட்டு சூர்யாவையும் படக்குழுவினரை பாராட்டியுள்ளார். சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் ரஹானே.

அப்போது ரசிகர் ஒருவர் சமீபத்தில் நீங்கள் பார்த்த படம் எது என்று கேட்க, அதற்கு ரஹானே சூரரைப்போற்று என்று கூறியதோடு, அந்த படம் தனக்கு மிகவும் பிடித்த இருந்ததாகவும், அதில் சூர்யாவின் நடிப்பு பிரமிக்கத்தக்க வகையில் இருந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் இந்தப் படத்தை கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனக்கு பரிந்துரைத்ததாகவும் ரஹானே தெரிவித்துள்ளார். எனவே தமிழ் சினிமாவை பிரம்மிக்க வைத்த சூரரைப்போற்று திரைப்படம் கிரிக்கெட் வீரரின் பாராட்டை பெற்றிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.