சினிமாவை பொருத்தவரை இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் என அனைவருமே படங்களில் நடித்து வருகிறார்கள். இதில் கிரிக்கெட் வீரர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன. எனவே அவர்களும் நடிகர்களாக களமிறங்கி படங்களில் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் கிரிக்கெட் வீரர்கள் சடகோபன் ரமேஷ், ஸ்ரீகாந்த் ஆகியோர் ஏற்கனவே படங்களில் நடித்துள்ளனர்.
தற்போது கூட ஹர்பஜன் சிங் பிரண்ட்ஷிப் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் இவர்கள் அனைவருமே கிரிக்கெட்டில் பிரபலமான பின்னர் தான் சினிமாவில் நடிக்க தொடங்கினார்கள். ஆனால் ஒரு இளம் கிரிக்கெட் வீரர் கிரிக்கெட்டில் பிரபலமாவதற்கு முன்பே தமிழ் படம் ஒன்றில் நடித்துள்ளார்.
அவர் வேறு யாருமல்ல தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி தான். சுழற்பந்து வீச்சில் கைதேர்ந்த வருண் சக்ரவர்த்தி இந்திய கிரிக்கெட் அணியில் தனது சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். இந்நிலையில் இவர் கிரிக்கெட் துறையில் பிரபலமாவதற்கு முன்பே தமிழ் படம் ஒன்றில் நடித்துள்ளார்.
பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ஜீவா படத்தில் தான் வருண் சக்ரவர்த்தி சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஒரு கிரிக்கெட் வீரராக இந்திய அணியில் சேர விஷ்ணு விஷால் போராடும் விளையாட்டு வீரராக நடித்திருப்பார்.
ஜீவா படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் பயிற்சி பெறும் அணியில், சக கிரிக்கெட் வீரராக வருண் சக்ரவர்த்தி சில காட்சிகளில் வந்து செல்வார். ஜீவா படத்தின் கதைப்படி கிரிக்கெட் வீரராக பயிற்சி பெற்று வரும் விஷ்ணு விஷால் அணி வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணியில் சேர்வதற்கு பல்வேறு போராட்டங்களை சந்திப்பார்கள்.
இது ரீல்…. ஆனால் உண்மையில் கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி இதே பிரச்சனைகளை அவரது ரியல் வாழ்க்கையில் சந்தித்துள்ளாராம். நிஜ வாழ்க்கையில் பல்வேறு போராட்டங்களையும், பிரச்சனைகளையும் சந்தித்த பின்னர் தான் தற்போது இந்திய கிரிக்கெட் அணி வீரராக வருண் சக்ரவர்த்தி உயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.